எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 9- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், இம்மாதம் 27ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.

இதனால், அடுத்த தலைமை நீதிபதியை நியமிக் கும் பணிகள் தொடங்கின. தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான தீபக் மிஸ்ரா பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு ஜே.எஸ்.கேஹர் கடந்த மாதம் பரிந்துரை செய்திருந்தார். சட்ட அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி தீபக் மிஸ்ராவை நிய மனம் செய்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதை யடுத்து தீபஸ் மிஸ்ரா நியமனம் தொடர்பாக சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்மூலம், உச்ச நீதிமன் றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா வரும் 27-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக் கிறார்.

1977ஆ-ம் ஆண்டு வழக்குரை ஞர் பணியை தொடங்கிய தீபக் மிஸ்ரா, 1996-ஆம் ஆண்டு, ஒடிசா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மத்தியப் பிரதேசம், பாட்னா, டில்லி உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய பிறகு, 2011ஆ-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார். தலைமை நீதிபதி பத வியில் இருந்து அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி அவர் ஓய்வு பெறுவார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner