எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு, ஆக.9
‘கன்னட மொழி பேசாத வங்கி ஊழி யர்கள், ஆறு மாதங்களுக்குள், கன்னட மொழியை கற்க வேண்டும்; இல்லாவிட்டால், பணியை இழக்க நேரிடும்‘ என, கன்னட மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.

கருநாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையி லான, காங்., ஆட்சி நடக்கி றது. இங்கு, ‘தேசிய, கிராமப் புற மற்றும் நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கிகளில் பணி புரியும், கன்னட மொழி பேசாத ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள், கன்னட மொழியை அடிப்படையில் இருந்து கற்க வேண்டும்‘ என, கர்நாடக அரசின் கீழ் இயங்கும், கன்னட மேம் பாட்டு ஆணையம், வங்கிக ளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, வங்கிகளின் மண்டல மேலாளர்களுக்கு, கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர், எஸ்.ஜி.சித்தரா மையா எழுதி யுள்ள  கடிதம்: வங்கிகளில் பணிபுரிவோர், கன்னட மொழிக்கு முக்கியத் துவம் கொடுப்பதில்லை. பல வங்கிகள், கன்னட மொழியில் பரிவர்த்தனை செய்ய ஆர்வம் காட்டவில்லை. மும் மொழி திட்ட அடிப்படையில், வங் கிகள் செயல்பட வேண்டும். வங்கி ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்காவிட்டால், பணி நியமன விதிகளின் கீழ், அவர்கள் பணி நீக்கம் செய் யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner