எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 9- இரண்டு வித மான 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டது, இந்த நூற் றாண்டின் மிகப்பெரிய ஊழல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மாநிலங்களவை செவ்வா யன்று காலை கூடியதும், வெவ் வேறு விதமாக 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்ட பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கிளப்பின. அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சரத் யாதவ் இதுதொடர்பான ரூபாய் நோட்டுகளின் மாதிரி களை காட்டினார்.

ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்துடன் வெளியாகும் ரூபாய் நோட்டுகள் ஏன் மாறு பட்ட அளவுகளை கொண்டுள் ளன? என சரத் யாதவ் கேள்வி யெழுப்பினார்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஒ பிரையன் உள்பட சில உறுப்பினர்களும் 500 ரூபாய் நோட்டுகளை காட்டினர்.  உயர் மதிப்புடைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு நட வடிக்கையை அடுத்து அச்சிடப் பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் வெவ்வேறு அளவில் இருப்ப தாக உறுப்பினர்கள் காட்டினர். இவ்விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க முன் கூட்டியே நோட்டீஸ் வழங்கப் படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அருண் ஜெட்லி விளக்க மளிக்க மறுத்துவிட்டார். எந்த வொரு காகிதத்தையும் காட்டுவ தற்கு அவை விதிமுறைகளில் இடமில்லை என்றும்; பூஜ்ஜிய நேரத்தை எதிர்க்கட்சிகள் தவ றாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால், 2 வகையான ரூபாய் நோட்டுக் களை அச்சிட்டது தொடர்பாக அவர் பதிலளிக்கவில்லை.

ஒன்று நாட்டுக்கு; மற்றொன்று பாஜக-வுக்கு...

காங்கிரஸ் கட்சியின் உறுப் பினர் கபில் சிபல் பேசுகையில், நாங்களும் இந்த நாட்டை ஆண்டிருக்கிறோம்; ஆனால் ஒரு போதும் இரண்டு விதமான ரூபாய் நோட்டுகளை அச்சடித் தது இல்லை; உண்மை என்ன வென்றால், இந்த 2 வடிவங் களில் ஒன்று ஆளும் கட்சிக்கா கவும், மற்றொன்று பிறருக்காக வும் அச்சிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது என்று குற்றம் சாட் டினார். மேலும், மத்திய அரசு உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது ஏன்? என்பதற்கான காரணத்தையும் எதிர்க்கட்சிகள் தற்போது தெரிந்து கொண்டிருப் பதாகவும் அவர் கூறினார். அவ ரது கருத்தை வழிமொழிந்த மற் றொரு காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத், பணமதிப் பிழப்பு நடவடிக்கையானது, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஊழல் என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ரூபாய் நோட் டுக்களை எங்கிருந்து பெற்றீர் கள்? என கபில் சிபலிடம் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப் பினார். எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக நோட்டீஸ் கொடுக் குமாறு அவையின் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கேட் டுக் கொண்டார். ஆனால், எதிர்க் கட்சிகள் தொடர்ந்து இப்பிரச்ச னையை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால், 6 முறை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்க ளவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner