எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சங்கராபுரம்

கல்லக்குறிச்சியை அடுத்துள்ள சங்கராபுரத்தில் 21.07.2017 அன்று சனிக் கிழமை மாலை 6.00 மணிக்கு தமிழக உரிமை மீட்பு பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஓவிய இமயம் மு.கலைச்செழியன்-  தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் வரவேற்புரை ஆற்றினார். கல்லக்குறிச்சி மாவட்ட  இலக்கிய அணித் தலைவர் புலவர் பெ.சயராமன், நைனார்  பாளையம் நகர கழகத் தலைவர் புலவர் கு.அன்டிரன், கல்லக்குறிச்சி நகர கழகத் தலைவர் ச.சுந்தரராசன், ,சங்கராபுரம் நகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்கள் மஞ்சை வசந்தன், அண்ணா சரவணன் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள்.

அண்ணா. சரவணன்

அண்ணா .சரவணன் தனது உரையில்: தந்தை பெரியார் சமூக நீதிக்காகவும், தமிழ் மொழியின் உயர்வுக்காகவும், தமிழக மக்கள் கல்வி உத்தியோகங்களில் உரிய பிரதிநிதித்துவம் பெறவும், கடுமையாகப் போராடியதன் விளைவாக தமிழகம் மறுமலர்ச்சி பெற்ற நாடாக விளங்கியது. ஆனால் இப்பொழுது மத்தியில் ஆளும் ஆர்எஸ்எஸ் பார்ப்பன ஜனதா அரசு பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை எல்லாம் பறித்து நம் தமிழ்நாட்டு மக்களை ஒரு 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ள முயற்சி செய்து வருகிறது. தமிழர்களாகிய நாமெல்லாம் மிக்க விழிப்பாக இருந்து மோடி அரசின் வஞ்சக அரசியலை எதிர்த்து, நமது உரிமைகளை மீட்க வேண்டும் என்று கூறினார்.

மஞ்சை வசந்தன்

மஞ்சை வசந்தன் தனது சிறப்புரையில்:

தமிழ்நாட்டில் தான் 20க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. சிறப்பான சிகிச்சை தரும் மருத்துவ மனைகளும், சிறப்பு உயர் சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகளும் உள்ளன. தமிழ்நாட்டு பாட திட்டத்தில் படித்த மருத்துவ மாணவர்கள் சிறப்பான சிகிச்சையை அளித்து வருகின்றனர். கோயமுத்துரில் ஆர்ஜி.முருகேசன் என்ற மருத்துவர் 1000 திறந்த இருதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்தமைக்காக மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப் பட்டவர். இன்றும் கூட காலையில் ஒரு திறந்த இருதய அறுவை சிகிச்சை, மாலையில் ஒரு திறந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து வருகிறார். இவர் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர். இப்படிச் சாதாரணமான தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் சிறந்த மருத்துவர்களாக விளங்குவதை பொறுத் துக் கொள்ள இயலாத பார்ப்பன மோடி அரசு, நீட் என்ற நமக்கு சம்பந்தம் இல்லாத தேர்வைக் கொண்டுவந்து நம்மை வஞ்சிக்க முயற்சிக்கிறது. நம்முடைய தலைவர் - ஆசிரியர் வீரமணி அவர்கள் இந்த அபாயத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவோடு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாக் களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தமிழக அரசுக்கு வழிகாட்டினார்: ஜனநாயக உரிமை மீட்பு பாதுகாப்பு கூட்டமைப்பு மூலம் அனைத்து தமிழக கட்சிகளையும் ஒருங்கிணைத்து 12.7.2017 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மிக எழுச்சியான கண்டன ஆர்ப்பாட் டத்தை நடத்தினார்: நாடு முழுவதும் உரிமை மீட்பு பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை நடத்தச் சொன்னதின் பேரில் இங்கு இக்கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. நூலை 22.-7-.2017 அன்றும் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகையால் நாம் விழிப்புணர்வு பெற்று இந்த நீட் தேர்வை ஒழிக்கவும் சமூக நீதியை நிலை நாட்டவும், தமிழர் தலைவர் ஆசிரியர் காட்டிய வழியில் நாம் பயணிப்போம் என்று கூறி முடித்தார்.

இந்தக் கூட்டத்தில் சங்கராபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் கே.மதியழகன் , மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் செ.ராதாகிருஷ்ணன், திருக்கோவிலூர் ஒன்றிய கழக தலைவர் கருப்புச் சட்டை ஆறுமுகம், கல்லக்குறிச்சி நகர செயலாளர் இரா.முத்துசாமி, குளத்தூர்  கழகத் தலைவர் இரா.சிவக்குமார், மாத்தூர் கிளைக்கழகத் தலைவர் அ.ச.துரைராஜ், மாத்தூர் கிளைக்கழகச் செயலாளர் கோவிந்தராஜ், வடகரை தாழனூர் கிளைக்கழகத் தலைவர் மு.சேகர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக பொறுப்பாளர் அய்.ஜீல்பிகார்அலி, விவசாய விடுதலை முன்னணி பொறுப்பாளர் ஆராமலிங்கம், சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க செம்பியன், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், கல்லை தமிழ்ச் சங்க செய லாளர் செ.வ.மதிவானன், தமிழ் ஆர்வலர்கள் மருத்துவர் வை.நெடுஞ்செழியன், கோ.ராமதாஸ், இரா.பார்த்தசாரதி, புலவர் இந்திரா, சங்கை தமிழ்ச் சங்கச் செயலாளர் சாதிக்பாஷா, அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சவுந்திரராசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியில் மாவட்ட கழக இளைஞர் அணி அமைப்பாளர் அ.கரிகாலன் நன்றி கூறினார்.

கரூர்

கரூர் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் நகர தலைவர் க.நா.சதாசிவம் அவர்களின் தலைமையில் 28.7.2017 அன்று மாலை 6 மணியளவில் கரூர் உழவர் சந்தை எதிரில் உரிமை மீட்பு உரை முழக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர் நகர செயலாளர் ம.சதாசிவம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் திருச்சி மண்டல செயலாளர் ஆல்பர்ட், கரூர் மாவட்ட தலைவர் ப.குமார சாமி, செயலாளர் ம.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு ஆகியோர் முன்னிலை பொறுப்பை ஏற்றனர்.

தலைமை கழக பேச்சாளர் இராம.அன்பழகன் கலந்து கொண்டு மருத்துவப் படிப்பில் திணிக்கும் நீட்டு, மாநில உரிமைக்கு வைக்கும் வேட்டு, மாட்டு இறைச்சிக்கு போடும் சட்டம், நாட்டை மதவெறிக் காடாக்கும் திட்டம், போன்ற உரிமை மீட்பு முழக்க உரையாற்றினார்.விடுதலை வாசகர் வட்ட தலைவர் வழக்குரைஞர் மா.கண்ணதாசன், துணைத்தலைவர்  வழக்குரைஞர் இரா.குடியரசு, துணைச் செயலாளர் ம.அரியநாயகம், சிறப்பு விருந்தினர்களாக வே.ராஜூ, இளைஞர் அணித் தலைவர் தே.அலெக்ஸ், செயலாளர் ம.செகநாதன், துணைத்தலைவர் நைஸ்சபாபதி, அமைப்பாளர் ச.குமார், மாணவரணி கவியரசு, மகளிர் பாசறை இரா.அம்பிகா, ஒன்றிய கழகத் தலைவர் சு.பழனிச் சாமி, இரா.கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். க..இரா.கிருட்டிணன், தாந்தோணி செயலாளர் மா.கணேசன், நகர துணைத் தலைவர் அ.காமராசு நன்றியுரை யாற்றினார்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் 28.7.2017 அன்று மாலை 7 மணிக்கு தமிழர் உரிமை மீட்பு திராவிடர்கழக பொதுக் கூட்டம் துவங்கியது. மாவட்ட செயலாளர் அர.வெள்ளிங் கிரி, பொதுக்குழு உறுப்பினர் சாலை வேம்பு சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேட்டுப்பாளையம் மாவட்ட அமைப்பாளர்

வீ.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, சோலை மாநகர் மாவட்ட தலைவர்

ச.சிற்றரசு, புலியகுளம் க.வீரமணி ஆகியோரின் உரைக்குப் பின் தலைமைக்கழக பேச்சாளர் பெரியார் செல்வன் அவர்கள் ஒன்றரை மணிநேரம் சிறப்புரையாற்றினார்.

தந்தை பெரியாரின் தத்துவங்கள் அதனால் தமிழகத்தில் விளைந்த பலன்கள் காமராசரை பெரியார் ஆதரித்து அதன் பலனாய் தமிழகத்தில் கல்வி நீரோட்டமாய் ஓடியது குறித்தும், திராவிடர் இயக்கச் சாதனைகள் குறித்தும், நீட் விவகாரத்தில் தமிழர் தலைவர் முன்னமே செய்த எச்சரிக் கையை தமிழக மக்கள் பொருட்படுத்தாததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும், தெளிவாக தனது உரையில் தெரிவித்தார்.

கூட்டத்தில் மேனாள் மாவட்ட தலைவர் பா.பாலசுப்பிரமணியன், நகர தலைவர் கோ.அர.பழனிசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் நந்தகுமார், மாவட்ட மாணவரணி தலைவர் இரா.அறிவுமணி, மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், காரமடை ஒன்றிய கழக தலைவர் ஏ.எம்.ராஜா, தியாகராசன், ராமம்பாளையம் செல்வம், மூலத்துறை வேலுசாமி மற்றும் கோவை குறிச்சி, கோபி பகுதிகளைச்சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். நகர செயலாளர் வெ.சந்திரன் நன்றி கூறினார்.

நாமக்கல்

நாமக்கல் கொசவம்பட்டி என்ஆர்எல் திருமண மண்டபம் அருகில்நாமக்கல் நகர தலைவர் வழக்குரைஞர் பெரியசாமி அவர்கள் தலைமை உரையாற்ற பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர் க.சண்முகம் அவர்கள் முன்னிலை வகிக்க, பாவேந்தர் இலக்கிய நிறுவனர் சுப்பண்ணன், மாவட்ட தலைவர் வை.நடராஜன், மாவட்டச் செயலாளர் சு.சரவணன், மண்டல செயலாளர் ஆ.கு.குமார், பள்ளிபாளையம் ஒன்றிய அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.சேகர், நாமக்கல் நகர கழக செயலாளர்

வீரமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீ.சந்தோஷ், பொதுக்குழு உறுப்பினர் வெங்கரை பழனியப்பன், வேலூர் அசேன், சுரேஷ், ஈரோடு தமிழ்ச்செல்வன், பரமத்தி செங்கோடன் பெரியார் பிஞ்சு வி.தர்ஷன், செல்லக்குமரன், பெரியார் பிஞ்சு பொ.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைக் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நறுக்குகள் என்னும் நிகழ்ச்சியை பெரியார் பிஞ்சுகள் ச.ராவணன், ச.எழிலன் நடத்திக்காட்டினார். பேராசிரியர் பழ.வெங்க டாசலம் அவர்கள் மந்திரமல்ல! தந்திரமே! என்னும் பகுத்தறிவு நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார். இறுதியாக மாவட்ட துணை செயலாளர் க.பொன்னுசாமி அவர்கள் நன்றி கூறினார்.

தூத்துக்குடி

21.7.2017 அன்று தலைமைக் கழகத்தின் முடிவுப்படி தமிழர்களின் உரிமை மீட்புப்  பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பங்க் அருகில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த.செல்வராசு தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சு.காசி, மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவர் இல.கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தி.ப.பெரியாரடியான் விளக்க உரையாற்றினார். நெல்லை மண்டலத் தலைவர் பால்.இராசேந்திரம் மற்றும் மாநிலச் சொற்பொழிவாளர் பேரா. முனைவர் க.அதிரடி அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.கந்தசாமி நன்றியுரை யாற்றினர். கூட்டத்தில் கழகத் தோழர்கள் இரா.அய்யம்பெருமாள், வழக்குரைஞர் செல்வம், பொ.செல்வராசு, இரா.ஆழ்வார், போசு, முத்தையாபுரம் செல்வராசு அவர்களின் துணைவியார் மகன், மகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செங்குன்றம்

கும்மிடிப்பூண்டி கழக மாவட்டத்தின் சார்பில் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே 21.7.2017 அன்று மாலை 6 மணி அளவில் மனித உரிமை, மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முதல் நிகழ்வாக புழல் அறிவுமானன், ஆவடி இரத்னா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இரமேஷ் வரவேற்பு ரையாற்றினார். பொன்னேரி செல்வி துவக்க உரையாற்றி னார். மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமையேற்று உரையாற்றினார். புழல் ஒன்றிய செயலாளர் ஜனாதிபதியின் மகன் (வயது 10) தமிழ் அரிமா பெரியாரை பற்றி கொள்கை முழக்கம் செய்தார். மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களை தொடர்ந்து மண்டல தலைவர் இரத்தினசாமி அவர்கள் பேசினார்கள்.

கூட்டத்தின் சிறப்புரையாக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்பான சிந்திக்கத் தகுந்த உரையைத் தந்தார்.
மிக பெரியகூட்டம் இந்த நிகழ்ச்சியை  முழுமூச்சாக ஏற்பாடு செய்தவர் செந்துறை ராஜேந்திரன் ஏற்பாடு செய்தார். கூட்டத்தின் நிகழ்ச்சிகளை ஓவியர் ஜனாதிபதி தொகுத்து வழங்கினார்.

செங்குன்றம் பகுதி ஒருங்கிணைப்பாளர் சம்பத் நன்றி யுரை கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner