எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 11 தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட சாமியார் சதாச்சாரி என்கிற சுவாமிஓம் என்பவர் தேசிய குற்றவியல் தனிப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சாமியாரின் சகோதரர் பிர மாத் ஜா என்பவருக்கு சொந்த மான மிதிவண்டி உதிரிபாகங் கள் கடையை உடைத்து, அந்த கடையிலிருந்து 11 மிதிவண் டிகளை திருடிச் சென்றதாக அவர்மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

டில்லி லோதி குடியிருப்பு காவல்நிலையத்தில் சாமியார் சதாச்சாரி என்கிற சுவாமிஓம் மீது 2008ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்ற வழக்குகளில் தொடர்புள்ள சாமியார் தொடர்ச்சியாக தலை மறைவானதையடுத்து, 2014ஆம் ஆண்டில் தேடப்படும் குற்றவாளியாக டில்லி நீதிமன் றம் அறிவித்தது. அவருக்கு எதிராக பிடியாணையையும் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

காவல்துறையின் தேசிய குற்றப்பிரிவு  தனிப்படை அமைத்து சாமியார் சதாச்சா ரியை தேடி வந்தது. இறுதியில் டில்லி பஜன்புரா பகுதியில் உள்ள அவருடைய வீட்டி லேயே சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட் டியாளராகவும் பங்கேற்றவராம்.

காவல்துறை குற்றப்பிரிவு டிசிபி மாதுர் வர்மா கூறுகை யில், பஜன்புராவில் உள்ள குடியிருப்பில் சாமியார் பதுங் கியிருக்கிறார் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் படி அவரை கைது செய்தோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner