எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, ஆக. 11- சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியார் தொடங்கி வைத்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மத்தியில் ஆளும் பா.ஜ. க. அரசுக்கு எதிரான போராட் டங்களை நடத்த முடிவுசெய்து உள்ளதாகவும், வரவுள்ள 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ. க.வே வெளியேறு என்பதை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் மேலும் கூறுகையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பொது மக்களின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக் குரியதாகி உள்ளது. ஜனநாய கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல் பட்டு வருகிறது. எனவே, மத் திய அரசுக்கு எதிராக செயல்பட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள் ளோம்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நாட்டை இரண் டாக பிரிக்க நினைக்கிறது. ஆனால் அதற்கு நாங்கள் அனு மதிக்க மாட்டோம். பா.ஜ.க. வின் அரசியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறோம். வரவுள்ள 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வே வெளியேறு என்பதே எங்களின் முழக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner