பாட்னா, ஆக. 11- பீகார் அரசி யல் மாற்றத்தால் சிதைந்தது மகா கூட்டணி மட்டுமல்ல; 11 கோடி மக்களின் நம்பிக்கையும் தான் என்று அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் அரசியல் சூழல் குறித்து பாட்னாவில் செய்தியா ளர்களிடம் சரத் யாதவ் கூறிய தாவது:
பீகாரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரசு, அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட் ரீய ஜனதா தளம் ஆகியவை இணைந்து மகா கூட்டணி அமைத்தன. அந்த அணி பாஜ கவை வீழ்த்தி ஆட்சியமைத்தது. அப்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் அய்க் கிய ஜனதா தளத்தின் வாக் குறுதிகளுக்கும், பாஜகவின் வாக்குறுதிகளுக்கும் முற்றிலும் முரண்பாடு இருந்தது.
வரலாற்றில் முதன்முறை யாக எதிரெதிர் கருத்துகளையும், கொள்கைகளையும் கொண்ட இரு கட்சிகள் (அய்க்கிய ஜனதா தளம், பாஜக) தற்போது இணைந்து ஆட்சியமைத்துள்ளன.
இதற்காக மகா கூட்டணி யில் இருந்து அய்க்கிய ஜனதா தளம் விலகியது 11 கோடி பீகார் மக்களின் நம்பிக்கையை சிதைத்ததற்கு ஒப்பாகும். அய்ந்தாண்டுகளுக்கு மகா கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று நம்பி வாக்களித்த மக்க ளுக்கு இது ஓர் ஏமாற்றம். இத னால் நானும் மிகுந்த வருத்தத் துக்கு ஆளாகியுள்ளேன். நான் எப்போதும் மகா கூட்டணிக்கு ஆதரவாக இருப்பேன் என்றார் சரத் யாதவ்.