எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை மாகாணத்தின் மேனாள் இடைக்கால முதல்வர், நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவர் கே.வி.ரெட்டி நாயுடாவார். 1919 இல் நீதிக்கட்சியில் இணைந்த நாயுடு 1920-23 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.  பின்னர் 1929-32 இல் தென்னாப்பிரிக்காவிற்கான பிரித்தானிய முகவராகவும், 1934-37 இல் இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1936இல் சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கைன் பிரபு விடுப்பில் சென்ற போது அவருக்குப் பதிலாக தற்காலிக சென்னை ஆளுநராகப் பணியாற்றினார்.  1937ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியமைக்க மறுத்ததால் ஏற்பட்ட இழுபறிநிலையின் போது மூன்று மாதங்கள் சென்னை மாகாணத்தின் இடைக்கால அரசின் முதல்வராகப் பதவி வகித்தார். 1940-42 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றினார்.

கூர்ம வெங்கடரெட்டி நாயுடு, டி.எம். நாயர், இராமசாமி முதலியார் ஆகிய மூவரடங்கிய குழு ஒன்று இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தது. இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பார்ப்பனரல்லாதோரை ஒன்றிணைக்கவும், அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கள் ஊக்கம் மிக்கவையாக அமைந்திருந்தன

சர். ரெட்டி அவர்கள் சென்ற முப்பது வருடங்களாக சமூக சீர்த்திருத்தம் அவசியம் என்பதையும், அதற்குப் பார்ப்பனீயம் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறதென்பதையும் உணர்ந்து பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம், பார்ப்பன மத ஆதிக்கத்தினின்று விடுபடுவதுதான் என்பதை எழுத்திலும், பேச்சிலும், செய்கையிலும் காட்டி வரும் ஒரு சீர்திருத்தப் பிரியர்.

நிற்க! நமது மாகாண பார்ப் பனரல்லாதார் கட்சியென வழங் கும் ஜஸ்டிஸ் கட்சி, சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களுக்கு பல துரோகங்களைச் செய்திருப்பினும், அவர் அதைப் பொருட்படுத்தாது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத் திற்கும், இயக்க வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய புனிதர். சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களது திறமையை அறிந்த அவர்களது சகாக்கள் பொறாமையினால் அவரை ஒதுக்கி வைத்திருந்த போதிலும், அரசாங்கத்தார் அவரது திறமையை உணர்ந்து அவ்வப்போது அவருக்குரிய ஸ்தானத்தை அவருக்கு கொடுத்து வருவதை பாராட்டுகிறோம்." ('குடிஅரசு', தொகுப்பு - 1938).

குறிப்பு: இலண்டன் நாடாளுமன்றக் குழுவின் முன் கே.வி.ரெட்டி நாயுடு குழுவினர் சாட்சி யளித்து திராவிட நாட்டின் அவசியத்தை வலியுறுத்திய நாள் இந்நாள் (1919).
- மயிலாடன்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner