எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உ.பி. முதல்வர் யோகி தொகுதி மருத்துவமனையில்
ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் 70 குழந்தைகள் பரிதாப மரணம்!

கோரக்பூர், ஆக. 13- கோரக்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் இல்லாத கார ணத்தால் கடந்த அய்ந்து நாள்களில் நூறு குழந்தைகள் துடிதுடித்து மரண மடைந்தன; இது தொடர்பாக தேசிய ஊடகங்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருவது நாட்டில் நிலவும் சர்வாதிகா ரத்தை தெளிவாக எடுத்துக்காட்டு கிறது.

கோரக்பூர் மாவட்ட தலைநகரில் பாபா ராதாதாஸ் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி செயல் பட்டு வருகின்றன. இந்த மருத்துவ மனையில் குழந்தைகள் நலசிறப்புப் பிரிவு செயல்படுகிறது. இந்த மருத்து வமனையை ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று மாநில முதல்வர் சாமியார் ஆதித்தியநாத் பார்வையிட்டுச் சென் றுள்ளார்.

இந்த நிலையில் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வென்டி லேட்டர் மற்றும் அவசரப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 63 குழந்தை கள் மரணமடைந்துள்ளனர்.   இன்று (13.8.2017) 70 குழந்தைகள் வரையில் மரணமடைந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த மருத்துவமனைக்கு கடந்த ஜூன் மாதம் ஆக்சிஜன் சிலிண்டரை வழங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளி பெறப்பட்டது.  ஆனால் விதிகளின் படி சில மருத்துவமனைகளுக்கு ஏற் கெனவே ஒப்பந்தம் செய்திருந்த ஒப் பந்தக்காரர்களை விரட்டியடிக்க முடி யவில்லை. அதே நிலையில் அகி லேஷ் அரசு ஒப்பந்தம் செய்திருந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒப்பந்ததாரர் களுக்கு யோகி அரசு பணம் தர வில்லை.

மேலும் மருத்துவமனை, ஆக்சி ஜன் வாங்குவதையும் நிறுத்திவிட் டது. ஒரு மாதம் வரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கவேண்டும் என் பது உ.பி. மருத்துவமனை விதிகளில் ஒன்று; இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஆக்சிஜன் பற் றாக்குறை ஏற்பட்டது. இது குறித்து சுகாதாரரத்துறை அமைச்சருக்கும், அத்துறை செயலாளருக்கும் மருத் துவமனை நிர்வாகம் எழுத்து மூல மாகவும், நேரிலும் கூறிவிட்டது. 7ஆம் தேதி காலை இம்மருத்துவ மனைக்கு முதல் அமைச்சர் சாமியார் ஆதித்தியநாத் வருகை தந்த போது அவரிடமும் இது தொடர்பாகவும் கூறப்பட்டது.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆக்சிஜன் கையிருப்பு அபாய கட்டத்தை அடைந்து இதனால் முக்கிய நோயாளிகள் (விஅய்பி) சிகிச்சை பெறும் இடங் களைத் தவிர மற்ற இடங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது நிறுத்தப்பட் டது. இதன் காரணமாக 7 ஆம் தேதி காலையில் இருந்து குழந்தைகள் துடி துடித்து மரணமடையத் துவங்கினர்.

இதில் பெரும்பாலான குழந்தைக ளின் மூளை ரத்த நாளம் சிதறி கண்,  நாசித்துவாரம் மற்றும் வாய் வழி யாக ரத்தம் வெளியேறி இறந்து போனார்கள். இவை ஒரு மோசமான வேதனை மரணமாகும்.

குழந்தைகளின்  தொடர் மரணத் தைத் தொடர்ந்து அக்குழந்தைகளின் உறவினர்கள் மருத்துவமனையில் கூட ஆரம்பித்து விட்டதால், மருத்து வமனைக்கு தொழிற் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பிற்காக நிறுத் தப்பட்டனர்.

மருத்துவமனையில் குழந்தைகள் தொடர்ந்து மரணமடைவது தொடர் பாக தெரிவித்த உ.பி. அரசு நிர்வாகம் "இது ஆக்சிஜன் குறைபாட்டால் ஏற் பட்ட மரணம் அல்ல, சிகிச்சை பல னின்றியே குழந்தைகள் இறந்தன" என உண்மை விவகாரத்தை மறைத்து அரசு குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஆனால் மருத்துவமனை 11 ஆம் தேதி இந்தியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மருத்துவ மனையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி 9 குழந்தைகள், 8ஆம் தேதி 12 குழந்தைகள், 9 ஆம் தேதி 9 குழந்தை கள், 10 ஆம் தேதி 23 குழந்தைகள் மற்றும் 11 ஆம் தேதி 7 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர் என பட்டி யல் வெளியிட்டுள்ளது. மேலும் மருத்துவமனை செய்திக்குறிப்பில் 10 ஆம் தேதி இரவு 7 மணிக்கு 52 சிலிண்டர்கள் வாங்கப்பட்டுள்ளன.  11 ஆம் தேதி நண்பகல் 1.30 மணிக்கு 100 சிலிண்டர்கள் வாங்கப்பட்டன என்று அன்றைய தினம் மொத்தம் 200 சிலிண்டர்கள் வாங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் உ.பி. முதல்வர் அகிலேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "குழந்தை களின் மரணத்திற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அகில இந்திய காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இச்சம்பவம் பற்றிக் கூறும் போது "ஆதித்தியநாத் அரசின் கையாலா காதத் தனமும், முறையற்ற அரசு நிர் வாகப் போக்குமே இந்த மரணங்க ளுக்குக் காரணம்" என்று கூறியுள்ளார்.

தொடர் மரணங்கள்

குழந்தைகள் வென்டிலேட்டர் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, வார்ட் எண் 14, மற்றும் 18 களில் தொடர்ந்து குழந்தைகள் மரண மடைந்துகொண்டே உள்ளன. 10ஆம் தேதி வென்டிலேட்டர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அனைத் துக் குழந்தைகளுமே மரணமடைந்து விட்டன.

இது தொடர்பாக இதுவரை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அல்லது முதல்வர் ஆதித்தியநாத் எந்த ஒரு அறிக்கையையும் அளிக்க வில்லை. முதல்வரை தொடர்புகொள்ள முயன்ற பத்திரிகையாளர்களிடம் "முதல்வர் இது தொடர்பாக அதிக அளவு வேதனையில் உள்ளார்" என்று கூறிவிட்டனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட் சியாளர் ராஜீவ் ரோதெலா தலைமை யில் துணை மருத்துவமனைத் தலை வர், நகர தலைமை நீதிமன்ற நடுவர், சுகாதாரத்துறை இணைச்செயலாளர் உள்ளிட்ட அய்ந்து நபர்கள் தலை மையில் இந்த மரணம் குறித்து விசா ரணை செய்ய குழு ஒன்றை அமைத் துள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் பத் திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தாவது: "மருத்துவ மனையில் 175 ஆக்சிஜன் சிலிண் டர்கள் கையிருப்பில் இருந்தன, ஆனால் இந்த சிலிண்டர்களை மிக வும் ஆபத்தான கட்டங்களில் மட் டுமே பயன்படுத்தவேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ள கார ணத்தால் நாங்கள் அதனைப் பயன் படுத்த முடியவில்லை" என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள குழந்தைகளின் மர ணத்தை மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளதாகவும், ஆனால் மருத்துவமனையில் சிகிச் சைப் பெற்றுவரும் குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள் இறப்பு நூறைத் தொட்டிருக்கும் என்று கூறப்படு கிறது.

பதவி விலக வேண்டும்!

காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, குலாம் நபி ஆசாத் தலைமையில், காங்., தலை வர்கள், கோரக்பூர் அரசு மருத்து வமனையில், நேற்று ஆய்வு செய்த னர். செய்தியாளர்களிடம், குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகளின் உயிரிழப் புக்கு, மாநில அரசின் அலட்சி யமே காரணம். மருத்துவமனை நிர்வாகம் கவனக்குறைவுடன் செயல்பட்டு உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை யால், இரண்டு நாட்களில், 30 குழந்தைகள் பலியாகியுள்ளன. இதே மருத்துவ மனையில், அய்ந்து நாட் களில், 63 குழந்தைகள் உயிர் இழந் துள்ளன. இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று,முதல்வர், ஆதித்ய நாத் மற்றும் சுகாதார அமைச்சர், சித்தார்த்நாத் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோரக்பூரில் நடந்திருப்பது இனப்படுகொலை நோபல் அறிஞர் கண்டனம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவனையில் 70 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்திருப்பது "படுகொலை" என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்தியார்த்தி விமர்சித்துள்ளார்.

இதனிடையே, சிகிச்சைக்கான திரவ ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய ரூ.67 லட்சம் தொகை பாக்கி இருப்பதால், அந்நிறுவனம் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்திவிட்டது என்று தெரியவந்திருக்கிறது. இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்தியார்த்தி வெள்ளிக்கிழமையன்று (ஆக. 11இல்), "63 குழந்தைகள் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் இறந்துள்ளனர். இது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தை சுட்டிக்காட்டுகிறது. இது உண்மையில் ஒரு இனப்படுகொலை போன்றது. இனிவரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவேண்டும். இது குறித்து அரசு எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டுத் தெளிவான விசாரணை நடத்தவேண்டும்" என்று விமர்சித்துள்ளார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner