எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஜெய்ப்பூர், ஆக. 13- நாடு முழு வதும் அக்டோபர் 2ஆம் நாள் காந்தி பிறந்தநாளாக கடைப் பிடிக்கப்பட்டு, அன்றைய நாள் அரசு தேசிய விடுமுறை நாளாக பின்பற்றப்பட்டு வரு கிறது. ஆனால், இந்த ஆண்டில் 2017-2018ஆம் ஆண்டில் அக் டோபர் 2ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் விடு முறை கிடையாது என்று அம் மாநில ஆளும் பாஜக அரசு வெளியிட்ட அரசிதழில் குறிப் பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண்சிங், பல்கலைக் கழ கங்களின் வேந்தராக உள்ள நிலையில், பல்கலைக்கழகங் களில் விடுமுறை நாள்கள் பட் டியலிலிருந்து காந்தியார் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் நாளை விடுமுறைப்பட்டிய லிலிருந்து நீக்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டு மாதங்களுக்கு முன் பாக பல்கலைக்கழக விடுமு றைப் பட்டியல் 12 பல்கலைக் கழகங்களில்  வெளியிடப்பட் டது. மேலும் பிற பல்கலைக் கழகங்களில் விடுமுறைகுறித்து பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவின் அடுத்த கூட் டத்தில் விடுமுறைக்கான முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட் டுள்ளது.

ஆளுநர் மாளிகையின் தொடர்பாளர் ஒருவர் கூறு கையில்,  அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் விடுமுறை என்று ராஜஸ்தான் மாநிலத்தின் உயர் கல்வித்துறை அறிவிக்க வில்லை. ராஜஸ்தான் மாநில அரசு அரசிதழில் வெளியிடப் பட்டுள்ள விடுமுறைப்பட்டிய லின்படி, ஆளுநர் மாளிகை பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறைப்பட்டியலை வெளியிட்டுள்ளதுÕÕ என்றார்.

காந்தியாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை வேலை நாள்களாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு இயக் கத்தை காந்தியம் குறித்த ஆய் வுகளுககான இந்தியக்குழுவின் தலைவர் என்.ராதாகிருஷ்ணன் நடத்திவருகிறார்.

ராஜஸ்தான் மாநில கல்வித் துறை அமைச்சர் கிரண் மகேஸ் வரி கூறுகையில், அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் திறந்து, காந்தியாரின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக, காந் தியார் பிறந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner