எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஆக. 14- ''குடியரசு முன்னாள் துணைத் தலைவர்  ஹமீது அன்சாரி, தான் பாது காப்பாக கருதும் எந்த ஒரு நாட் டுக்கும் சென்று வாழலாம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.

இந்நாட்டின் குடியரசுத் துணை தலைவராக, 10 ஆண்டு காலம் பதவி வகித்து, சமீபத் தில் ஓய்வு பெற்ற, ஹமீது அன் சாரி, 'இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என, முஸ்லிம்கள் நினைக்கின்றனர்' என, கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, பா.ஜ.க., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலை வர், இந்திரேஷ் குமார், நாக் பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதாவது: இந்தியாவில், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதும் ஹமீது அன்சாரி போன்றவர்கள், முஸ் லிம்களுக்கு பாதுகாப்பு மிக்க, ஒரு நாட்டின் பெயரை சொல்ல வேண்டும். அந்த நாட்டுக்கு, ஹமீது அன்சாரி போன்றவர்கள் சென்று வாழலாம்.

ஹமீது அன்சாரி கூறிய கருத்துக்கு, ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏராளமான முஸ்லிம்கள், அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்த போது, மதச் சார்பற்றவராக திகழ்ந்த, அன்சாரி, பதவி போனபின், தீவிர முஸ்லிமாகி விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner