எழுத்துரு அளவு Larger Font Smaller Fontபிஜேபி தலைவர் அமித்ஷா அவர்களின் வருகை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- தமிழிசை  சவுந்தரராசன்,

தமிழக பிஜேபி தலைவர்

மிஸ்டு காலில் கட்சியை வளர்க்க முடியவில்லை. குறுக்கு வழியில் காரியம் சாதிப்பதில் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்தவர் அமித்ஷா ஆயிற்றே - ஆள் பிடிக்கும் வேலையிலும் சமர்த்தானவர் என்பதால் அந்த அர்த்தத்தில் சொல்லு கிறாரோ!

அப்படியா?

ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாட்டில் மீதேன், ஷேல்கேஸ் போன்ற எந்தத் திட்டப்பணியிலும் ஈடுபடவில்லை.

- ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல் இயக்குநர் குல்பீர் சிங்

தமிழ்நாட்டு மக்கள் விவரம் புரியாமல் போராடுகிறார்கள் என்கிறாரா? நல்ல விவரமான ஆளப்பா இவர்? இவர் பேசாமல் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். அதற்கான தகுதி பேஷா இருக்கு!

எச்சரிக்கை!

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டாததால் விளையும் நோய்கள் - இது தொடர்பான பின் விளைவால் அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் பொருளாதார செலவு ரூ.89,000 கோடியாம், சொல்லுவது யுனிசெஃப்.

அணி மாறுவாரா நிதிஷ்?

பீகாரின் 600 கோடி ரூபாய் அரசு பணம் முறைகேடு தொடர்பாக துணை முதல் அமைச்சர் சுஷில் குமார் மோடியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்.

முன்னாள் துணை முதல்வர்மீது ஊழல் குற்றச் சாட்டை வைத்து அணி மாறிய முதல் அமைச்சர் நிதிஷ் குமார் புதிய துணை முதல்வர் மீதும் அதே ஊழல் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதே. மறுபடியும் அணி மாறுவாரா நிதிஷ்?

இந்தோனேசியாவிலும் இந்துத்துவாத்தனமா?

இந்தோனேசியாவிலி ருந்து கிழக்கு ஜாவா மாநிலத்தில் துபான் நகரில் சீனக் கோயில் ஒன்றுள்ளது. இக்கோயிலில் ஏற்கெனவே

சில கடவுள் சிலைகள் உள்ளன. இந்நிலையில் 100 அடி உயரத்தில் குவான்யூ என்ற கடவுள் சிலை உரு வாக்கப்பட்டுள்ளது.

டிராகன், பாம்பு ஆகியவற்றுடன் வாள், அரிவாள் ஆகிய ஆயுதங்களையும் ஏந்தியபடி உள்ளது அந்தக் கடவுள் சிலை. இந்தப் பெண் கடவுள் சிலைக்கு அங்குள்ள முஸ்லீம்களும், தேசியவாதிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.

இந்துத்துவாத்தனம் இந்தியாவையும் தாண்டி பயணிக்கிறதோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner