எழுத்துரு அளவு Larger Font Smaller Fontபுதுடில்லி, ஆக. 15-
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்துக் கான வரைவு மசோதாவை, மத்திய உள்துறை அமைச்

சகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக டில்லி வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

ஓராண்டுக்கு மட்டும் நீட் தேர்வி லிருந்து விலக்களிக்கும் அவசரச் சட்டம் கொண்டு வந்தால், அதற்கு ஒத்துழைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அறிவித்தது.

இதையொட்டி தமிழக அரசும், ஓராண்டுக்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்குக் கோரும் அவசரச் சட்ட வரைவை உடனடியாக தயாரித்து, தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனை டில்லி அனுப்பி வைத்தது.அவர் திங்களன்று காலை மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களைச் சந்தித்து, அவசரச் சட்ட வரைவை வழங்கினார்.

அப்போது, இவ்விவகாரத்தில் கூடுதல் ஆவணங்கள் தேவை என்று உள்துறை அமைச்சகம் கூறியதையடுத்து, பிற்பகலில் கூடுதல் ஆவணங்களை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

தற்போது, தமிழக அரசின் அவசரச்சட்ட வரைவை ஏற்றுக் கொண்டதாகவும், அடுத்ததாக சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, சட்டத்துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 3 அமைச்சகங்களும் ஒப்புதல்அளித்த பின்னர், முறைப்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் ஒப்புதல் அளித்தபின் அவசரச் சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner