எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கோவில் விளக்கிலிருந்து தீ சேலையில் பற்றியதால் படுகாயமடைந்த பெண் சாவு

அவனியாபுரம், ஆக.15 மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் திருஞானம். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 58).
சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி வழிபட்டார். பின்னர் கோவிலை சுற்றி வரும்போது அங்கிருந்த விளக்கு தீ கலைச்செல்வியின் சேலையில் பற்றியது.

இதை பார்த்த பக்தர்கள் தீயை அணைத்து கலைச்செல்வியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கலைச்செல்வி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாத யாத்திரை
மேற்கொண்ட பக்தர் பலி

எட்டயபுரம், ஆக.15  ஒட்டப்பிடாரம் அருகே உள்ள ஏ.கே.எஸ்.நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). இவர்  அங்காடி நடத்தி வந்தார். இவரது மனைவி பூர்ணிமா. நேற்று மாலை சுரேஷ்குமார், பூர்ணிமா மற்றும் இவர்களது உறவினர்கள் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாதயாத்திரையாக சென்றனர். இவர்கள் சால்நாயக்கன்பட்டி விலக்கை தாண்டி செல்லும் போது தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்த கனிஷ்கர் மகன் ஜீசஸ் அஸ்வின் (21), அவரது நண்பர் காமநாயக்கன்பட்டி அருகே உள்ள வடக்கு செவல்பட்டியை சேர்ந்த மதிஇன்னாசி முத்து மகன் மைக்கேல் சதீஷ்குமார்(19) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷ்குமாரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஜீசஸ் அஸ்வின், அவருடன் பயணம் செய்து வந்த காமநாயக்கன்பட்டி அருகே உள்ள வடக்கு செவல்பட்டியை சேர்ந்த மதி இன்னாசிமுத்து மகன் மைக்கேல் சதீஸ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை காவல்நிலைய ஆய்வாளர் அரிகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பலியான சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பசுவந்தனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner