எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மும்பை, ஆக.15 மராட்டிய மாநிலத்தில் மந்திர சக்தி பெறு வதற்காக 7 வயது சிறுமியை கடத்தி நரபலி கொடுத்து கொன்ற வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யவாட்மால் மாவட்ட நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

மராட்டிய மாநிலம், யவாட்மால் மாவட்டத்தில் உள்ள சோராம்பா கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடந்த 2012-ம் ஆண்டில் மந்திர சக்தி பெறு வதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி தலையை துண்டித்து கொடூரமாக நரபலி கொடுத்துள் ளனர்.
பின்னர், சிறுமியின் பிணத் தை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளியான பின்னர், சிறுமி நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு அம்மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று இதற்கான தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், சிறுமியை சிறிதும் ஈவிரக்கமின்றி கொன்ற 7 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு நபருக்கு அய்ந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

செய்தியும் சிந்தனையும்

நரித்தந்திரம்

செய்தி: கேரளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் படுவதை எதிர்க்கிறோம்..
- ஆர்.எஸ்.எஸ். அறிவிப்பு

சிந்தனை: கேரளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப் போகிறார்களா - அது ஆர்.எஸ்.எசு.க்குத் தெரிந்து விட்டதா? அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மறைமுகமாகக் கூறுகிறதா ஆர்.எஸ்.எஸ்.? என்ன நடக்கிறது நாட்டில், என்னே நரித்தந்திரம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner