எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பள்ளியிலிருந்து திரும்பிய
சிறுமியிடம் பாலியல் வன்முறை

சண்டிகார், ஆக. 16- சண்டிகரில் உள்ள பள்ளியில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் 8ம் வகுப்பு மாணவியான நிரன்யா (12) பெயர் மாற்றப்பட்டுள்ளது) கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இதை கவனித்த 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவன், கத்திமுனையில் நிரன்யாவை மிரட்டி அரு கில் இருந்த பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு நிரன்யாவை அவன் பாலியல் வன்முறை செய்துள்ளான். வீட் டிற்கு சென்று தனது பெற்றோர்களிடம் நிரன்யா அழுதபடியே நடந்ததை கூறியுள்ளார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.  இதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

காரில் 3 பேர் துரத்தியதாக
மேலும் ஒரு பெண் புகார்

சண்டிகார், ஆக. 16- சண்டிகாரில் கடந்த 5ஆம் தேதி நள்ளிரவு காரில் தனியாக சென்ற அய்ஏஎஸ் அதிகாரியின் மகளை, அம்மாநில பாஜ தலைவரின் மகன் விகாஸ் பர்வாலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஸ்குமார் ஆகியோரில் காரில் விரட்டி சென்றனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின் அடிப்படையில் பாஜ மாநில தலைவரின் மகன் மற்றும் அவரது நண்பரை காவலர்கள் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்ற தன்னை காரில் வந்த 3 பேர் துரத்தி வந்ததாக இளம்பெண் ஒருவர் சண்டிகார் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்து பழங்களை வாங்கிக்கொண்டு இளம்பெண் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது 36ஆவது செக்டார் பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று அவரை பின்தொடர்ந்து விரட்டி வந்து உள்ளது. 40ஆவது செக்டார் வரை அந்த கார் அவரை துரத்தி வந்ததாக கூறப்படுகிறது. தன்னை துரத்தி வந்த காரின் பதி வெண்ணுடன் இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹிசாரை சேர்ந்த இந்த இளம்பெண் சண்டிகரில் பேயிங் கெஸ்ட்டாக தங்கியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner