எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஆக. 16- மும்பை நகரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவைத் தொடர்ந்து உரியடி என்னும் மனிதபிரமீடு அமைத்து பானையை உடைக்கும் நிகழ்வு நடைபெறும். ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நடந்த இந்த நிகழ்வில், மும்பை நகரில் இரண்டு பேர் மரணமடைந் துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முன்பு இந்த விழாவிற்கு பல்வேறு தடைகளை விதித்த நீதிமன்றம் இந்த ஆண்டு எல்லாத் தடைகளையும் அகற்றியதன் விளைவாக மரணங்களும், உடல் உறுப்பு சேதங்களும் நடைபெற்றுள்ளன.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உரியடி நிகழ்ச்சியை தஹி ஹண்டி என்று மகாராஷ்டிராவில் அழைப் பார்கள். 2010-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த நிகழ்ச்சி சூதாட்டமாக மாறிவிட்டது, தாதர், மாதுங்கா போன்ற மும்பை பகுதிகளிலும் பாண்டுப், முல்லண்ட், தானே போன்ற புறநகர் பகுதிகளில் அதிக அளவு உயரமாக கட் டப்பட்டு அதை உடைக்கும் குழுவிற்கு சூதாட்டம் போன்று கோடிக்கணக்கில் பரிசுகள் அறிவிக்கப்பட்டது, எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் உயிரிழப்பவர்களும், உடல் உறுப்புகளை இழப்பவர்களும் அதிகம் 2013 ஆம் ஆண்டுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியால் மரணமடைந்துள்ளனர். மேலும் அதிக உயரத்தில் மனிதர்கள் மீது ஏறி தயிர் பானையை உடைக்க 8 வயது சிறுவர் சிறுமியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

2014-ஆம் ஆண்டு இந்த விழாவை தடைசெய்யக்கோரி மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதி மன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. அதன்படி 18 வயதுக் குட்பட்ட சிறுவர்களை இதில் ஈடுபடுத் தக்கூடாது என்றும், 20 அடி உயரத்துக்கு மேல் மனிதப் பிரமீடு அமைக்கக் கூடாது என்றும் கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

ஆனால் பாஜக, சிவசேனா அரசு இந்த விழாவிற்கு அரசு அனுமதி வழங்கி இதை சாகச விளையாட்டாக அங்கீகரித் தது, இதன் மூலம் நீதிமன்றத் தடை செல்லாததா£கிவிட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அதிக உயரம் கொண்ட பிரமீடுகள் அமைத்து சிறுவர் களை ஈடுபடுத்தினர். இதனால் 2015 ஆம் ஆண்டு 5 மரணங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி வழக்கின் விசாரணை மீண்டும் வந்த போது நீதிமன்றம் தடைகளை விலக்கிக் கொண்டு மாநில அரசு தகுந்த பாதுகாப்புடன் இந்த விழாவை நடத்தலாம் என்று உத் தரவிட்டது.

இதற்கு முந்தைய அனைத்து விழாக் களும் மாநில அரசின் காவல்துறையி னர் பாதுகாப்பின் கீழ் நடைபெற்ற வைதான், இருப்பினும் இதை நடத்து பவர்கள் அரசியல்வாதிகளாக இருப்ப தால் அரசு பாதுகாப்பு விதிகளை நடை முறைப்படுத்த தயக்கம் காட்டுகிறது, இதனால் மரணங்கள் நிகழ்வது தொடர் கதையாகிவிட்டது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடந்த உரியடி விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவின் போது நடந்த மரணங்கள் மற்றும் படுகாயம டைந்தவர்கள் குறித்து மும்பை மாநக ராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது, அதில் மும்பை புறநகரில் ஒருவர் மற்றும் நவிமும்பையில் ஒருவர் நிகழ்விடத்தில் மரணமடைந்துள்ளனர். மேலும் மும்பை நகரில் 40-க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் அய்ந்துபேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும். 17 பேர் நிரந் தரமாக ஊனமடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் மும்பை நகரம், புறநகரம் மற்றும் நவிமும்பை யில் நடந்த பல்வேறு உரியடி நிகழ்வு களில் 200-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்துள்ளனர் இதனால் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப் பட்டுள்ளது.

இது போன்ற உயிருக்கு ஆபத்தான விளையாட்டுக்களை விளையாட நாடு முழுவதும் தடையிருக்கும்போது மத நிகழ்வை காரணம் காட்டி அரசும், நீதிமன்றமும் கட்டுப்பாடுகளை தளர்த் தியதன் விளைவாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கர் பகுதியைச்சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகன் என்பவர் கூறும் போது இந்த மரணங்களுக்கு நீதிமன்றமும் அரசும் பதில் கூறவேண்டும்.

இது போன்ற விளையாட்டுகள் ஆபத்தானவை என்று தெரிந்தும் மத நம்பிக்கையை காரணம் காட்டி அனும தியளித்தன் விளைவாக பல இளைஞர் கள் மரணமடைகின்றனர் என்று தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner