எழுத்துரு அளவு Larger Font Smaller Font


விழுப்புரம், ஆக. 16- உத்தரப்பிரதேச மாநிலம், அதோஹர் நகரைச் சேர்ந்தவர் சோம்நாத் பிரஜாபதி (40). இவர், தனது மனைவி சாதனா பிரஜபதி (35). மகன் சுமித் பிரஜபதி (15), உறவினர் முனி லால் பிரஜாபதி (65) ஆகியோருடன் தென் மாநிலங்களுக்கு கடந்த நான்காம் தேதி பக்தி சுற்றுலா புறப்பட்டார்.

இவர்களுடன் மேலும் இரு குடும்பத்தினர், தனித் தனி கார்களில் சுற்றுலா வந்தனர்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, பழனி போன்ற பகுதிகளுக்குச் சென்ற அவர் கள், கடைசியாக திங்கள்கிழமை ராமே சுவரம் வந்தனர். அன்றிரவு அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 கார்களும் விழுப்புரம் அருகே இரு வேல் பட்டு பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. இதில், கடைசியாக வந்த சோம்நாத் பிரஜாபதி குடும்பத்தினர் பயணித்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டை மீது ஏறி எதிர்சாலையில் பாய்ந் தது.

அப்போது, அந்த காரும் சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத் தில் காரில் வந்த சோம்நாத் பிரஜாபதி, சாதனா பிரஜாபதி ஆகியோர் நிகழ்விடத் திலேயே உயிரிழந்தனர். முனிலால் பிர ஜாபதி, சுமித் பிரஜாபதி, கார் ஓட்டுநர் ராகுல் சிங், மாற்று ஓட்டுநர் தினேஷ் யாதவ் ஆகியோர் காயமடைந்தனர்.

அவர்களை திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முனிலால், ராகுல் சிங் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். காலில் முறிவு ஏற்பட்ட சுமித் பிரஜாபதி தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சோம்நாத் பிரஜாபதி, சாதனா பிரஜாபதி ஆகியோரின் பிணங்களை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து திருவெண்ணெய் நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner