எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 16-  திமுக தலை வரும், முன்னாள் முதல்-அமைச்சரு மான கலைஞர் அவர்கள் மருத்து வப் பரிசோதனைக்காக இன்று (16.8.2017) காலை 6.40 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.

மருத்துவமனை தரப்பில் சாதா ரண பரிசோதனைக்காகவே கலை ஞர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு உள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து திமுக தலைவர் கலைஞர் இன்று மாலைக்குள் வீடு திரும்புவார். கலைஞருக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக்குழாய் மாற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. காவேரி மருத்துவமனையில் கலைஞருக்கு செயற்கை உண வுக் குழாய் மாற்று சிகிச்சை முடிந்தது. சிகிச்சை முடிந்ததும் கலைஞர் வீடு திரும்பினார். மருத்துவமனையில் கலைஞ ருக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்றி அமைக்கப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

திமுக தலைவர் கலைஞருக்கு சிகிச்சை சிறப்பாக முடிந்தது, அவர் தற்போது நலமாக உள்ளார் என கனிமொழி எம்.பி. கூறிஉள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner