எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அகமதாபாத் ஆக 16-- இறந்த மாட்டின் தோலை அகற்றிய தலித்துகள் மீது பசுப்பாதுகாவ லர்கள் கொலைவெறித்தாக்கு தல் நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு இதே காரணத்திற்காக இந்தியா முழுவதும் மாபெரும் போராட்டம் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் அதே போன்று ஒரு வன்முறையை பசுப்பாதுகாவலர்கள் அரங் கேற்றியுள்ளனர்.

குஜராத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் கசோர் என்னும் கிராமத்தில் இறந்த மாடு ஒன் றின் தோலை அகற்றஅவ்வூரில் உள்ள சிலர் அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் தலித்துகளை அழைத்துள்ளனர். மேலும் இதற்கான அனுமதியை ஊர் நிர்வாகத்திடமிருந்து பெற்றி ருந்தனர். அவர்கள் அங்கு வந்து இறந்த மாட்டின் தோலை அகற்றி அதை கிராம நிர்வாகத் துடன் ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டனர்.  இந்த நிலையில் பசுப்பாதுகாவலர்கள் தலித்துகளின் புகுந்து தோல் உரித்த ரோஹித் மற்றும் அவ ரது குடும்பத்தினரை வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இத னால் அவர்கள் ஊரை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். தாக்குதலுக்கு ஆளானவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் காவல்துறை பசுப் பாதுகாவலர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கமுன்வர வில்லை.  இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று அரசு சில சலுகைகளை வழங்குவதாக கூறியதை அடுத்து அவர்கள் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி யுள்ளனர். இதனை அடுத்து நேற்றுமாலை மீண்டும் அவர் கள் மீது பசுப்பாதுகாவலர்கள் கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.   இவ்விவகா ரம் தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையர் சவுரப் சிங் பார்வைக்குச்சென்ற பிறகு தாக்குதலுக்கு ஆளானவர்களின் புகார்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இதனி டையே தலித்துகளைத் தாக்கிய தாக அப்பகுதி பசுப்பாதுகாவ லர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையர் சார் பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இறந்த மாட்டுத் தோலை உரித்தகாரணத்திற்காக சிலர் தலித்துகளை தாக்கியதாக எங்களுக்கு புகார் வந்தது, இதனைத் தொடர்ந்து நாங்கள் வழக்கு பதிவுசெய்துள்ளோம். இச்சம்பவத்தில் 7 பேர் ஈடு பட்டுள்ளதாக தெரிகிறது, அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். விரைவில் அவர்களை கைதுசெய்வோம், மேலும் தாக்குதலுக்கு ஆளான தலித்துகளின் குடும்பத்தின ருக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந் தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் உனா என்ற இடத்தில் இதே போன்று இறந்த மாட் டின் தோலை உரித்ததற்காக பசு பாதுகாவலர்கள் சிலர் நான்கு பேரை கட்டி வைத்து நிர்வாணப்படுத்தி சாலையில் அடித்து இழுத்துச்சென்றனர். இதைத் தொடர்ந்து நாடு முழு வதும் தலித்துகள் மாபெரும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும் இந்தச்சம்பவங் கள் வட மாநிலங்களில் தொடர் கதையாகிவிட்டது.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner