எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டில்லி, ஆக. 17- நீட் அடிப்படை யில் மருத்துவக் கல்வி மாண வர் கலந்தாய்வை தொடங்க உச்ச நீதிமன்றத்தில் கோரப் பட்ட வழக்கில் எதிர் மனுதார ராக அரியலூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா இணைந்தார். நாடு முழுவதும் தகுதித் தேர்வு மூலம் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடத்துவ தற்கான நீட் தேர்வுக்கு பல் வேறு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் நீட் தேர்வு நடை பெற்றது. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.

இதனிடையே தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாண வர்களுக்கு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 85 சத வீதம் இடஒதுக்கீடு வழங்கி யதை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக் கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட் டது. மேலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கவும் உத்தரவிட் டது. இந்நிலையில் சென்னை யில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழகத்தில் ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் அவசர சட்ட முன் வரைவை தாக்கல் செய்தால் அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார். அதன்படி திங்கள்கிழமை டில்லியில் உள் துறை அமைச்சகத்திடம் நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசரச் சட்ட முன் வரைவு, சுகாதாரத் துறை செய லாளர் ராதாகிருஷ்ணனால் தாக் கல் செய்யப்பட்டது. ஆனால் இப்படி விலக்கு அளித்தால் நீட் தேர்வுக்காக தயாரான மாணவர்களின் நலன் கேள் விக்குறியாகிவிடும் என்று ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வலியுறுத்தி உச்சநீதி மன்றத்தில் நேற்று மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத் துக் கொள்கிறது.

இந்த வழக்கில் சிபிஎஸ்இ மாணவர்கள் தரப்புக்காக வழக் குரைஞர் நளினி சிதம்பரம் ஆஜராக உள்ளார் இதனிடையே அரியலூரைச் சேர்ந்த அனிதா இந்த வழக்கில் தன்னையும் எதிர்மனுதாரராக இணைத்துக் கொண்டார். அரியலூர் குழுமூ ரைச் சேர்ந்தவர் சண்முகம். மூட்டைத் தூக்கும் தொழிலாளி யான இவரது மகள் அனிதா, பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப் பெண்களும், மருத்துவ கட் ஆஃப்பில் 196.75 மதிப்பெண் களும் பெற்றுள்ளார்.
மாநில பாட திட்டத்தில் படித்த அனிதா, நீட் தேர்வில் 86 மதிப்பெண்களை பெற்று உள்ளார். நீட் தேர்வு அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் தனது மருத்து வராகும் கனவு பாழாகிவிடும் என்று அந்த மாணவி தெரிவித் துள்ளார். பிளஸ் 2 அடிப் படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தால் அனிதா வுக்கு மருத்துவம் பயில் இடம் கிடைத்துவிடும். நீட் அடிப் படையில் மாணவர் சேர்க் கைக்கு கோரிய வழக்கில் எதிர் மனுதாரராக தமிழக பெற்றோர் மாணவர் நலச் சங்கமும் இணைந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner