எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இராகுல் பேச்சு

சாமானிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் சமையல் எரிவாயுக்கான மானியம் ரத்து, மண்ணெண்ணெய் மானியம் ரத்து ஆகியவை மோடி தலைமையிலான பிஜேபி அரசின் சாதனைகள்.
- இராகுல் காந்தி, துணைத் தலைவர், காங்கிரஸ்

- - - - -

வைகோ பேச்சு

அரசின் கல்வி முறையை மாநிலங்கள் மீது திணிக்க நினைத்தால் நூறாவது சுதந்திர தினம் கொண்டாடும் போது பல பகுதிகள் இந்தியாவில் இல்லாமல் போய்விடும். அமெரிக்க அய்க்கிய நாடுகளைப் போல இந்திய அய்க்கிய நாடுகளாக வரவேண்டும் என்று காஞ்சிபுரம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுவோம்.
- வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

- - - - -

மாயாவதி பேச்சு

உ.பி. கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் அடைந்ததற்குக் காரணம் அரசு நிருவாகத்தின் அலட்சியம், ஊழல் போன்றவற்றால்தான் நடந்தது. ஆனால் இதை இயற்கைப் பேரழிவு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலம் என்பதால் இதுபோன்ற குற்றங்களை பிரதமர் மோடி பூசிமெழுகப் பார்க்கிறார்.
- மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி

- - - - -

இரா.முத்தரசன் பேச்சு

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எங்கள் அரசு மைனாரிட்டி அரசு எனக் கூறியுள்ளார். பெரும்பான்மைக்கு இன்னும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்றும் சொல்லியுள்ளார். இதன் மூலம் என்ன தெரிகிறது? இப்பொழுது ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் இயங்கும் அரசு மைனாரிட்டி அரசு என்பதாகும். எனவே இவ்வரசு ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லாவிடில் ஆளுநர் தலையிட்டு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோர வேண்டும். .
- இரா.முத்தரசன், மாநில செயலாளர், சி.பி.அய்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner