எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மேற்கு வங்காள தேர்தல்: 7 நகராட்சிகளையும் கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரசு

கொல்கத்தா, ஆக. 19- மேற்கு வங்காளத்தில் நாடியா, பிர்பும், தெற்கு தினாபூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 நகராட்சிகளுக்கு கடந்த 13ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரசு, பா.ஜனதா, காங்கிரசு, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், ஏராளமான சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில் திரிணாமுல் காங்கிரசு கட்சி 7 நகராட்சிகளையும் கைப்பற்றி உள்ளது. கூப்பர்ஸ் கேம்ப், நகல்காட்டி, புனியாட்பூர், துர்காபூர், பன்ஸ்குரா, ஹால்டியா, துப்குரி ஆகிய 7 நகராட்சிகளிலும் ஆளுங்கட்சி வேட்பாளர்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் பா.ஜனதா 2ஆவது இடத்தையும், இடதுசாரிகள் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினருக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் தனது கட்சியினருக்கு வாக்களித்த மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.

ஜாதி மறுப்பு திருமண இணையருக்கு
ரூ. ஒரு லட்சம் பரிசு: ஒடிசா அரசு அறிவிப்பு

புவனேஸ்வர், ஆக. 19- -ஜாதி மறுப்புத் திருமணத்தை ஊக்கு விக்கும் வகையில் ஜாதி மறுப்புத் திருமண தம்பதியருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது. சமூகத்தில் ஜாதி வேறுபாடுகள் இன்றி சமத்துவத்தை ஏற்படுத்த ஒடிசா மாநில அரசு ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் இணையருக்கு ரூ. ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோருக்கான தொகையை 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக ஒடிசா அரசு உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்தத் தொகை இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகையை பெறத் திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், ஒரு லட்சம் ரூபாய் பரிசானது, பணமாகக் கையில் கொடுக்கப்பட மாட்டாது; நிலமாகவோ, வீட்டுக்குத் தேவையான பொருட்களாகவோதான் வழங்கப் படும் என்றும் ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner