எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பா.ஜ.க. தலைவர் வீட்டில் 200 பசுக்கள் சாவு

ராஞ்சி, ஆக. 19- பாஜக தலைவர் ஒருவர் நடத்தி வந்த பசுப் பாதுகாப்பகத்தில் 200-க்கும் மேற்பட்ட பசுக்கள் நோயாலும் பட்டினியாலும் மரணித்த கார ணத்தால் சத்தீஷ்கர் மாநில பாஜக தலைவர்களில் ஒருவ ரான ஹரீஸ் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்பூர் கிராமத்தில் பாஜக  தலைவர் ஹரீஸ் வர்மா என்பவர் 7 ஆண்டுகளுக்கும் மேலாக  பசுப் பாதுகாப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்காக இவர் அரித்துவார் மற்றும் அரி யானா மாநிலம், ஹிஸ்ஸாரில் உள்ள சில இந்து அமைப்புக ளிடமிருந்து பெரும் தொகையை மாதம்தோறும் பெற்று வரு கிறார்.

இந்த நிலையில் சுமார் 400 பசுமாடுகளுக்கு மேல் இருக் கும் இந்த கோசாலை (பசுப் பாதுகாப்பகம்), பராமரிக்கப் படாத நிலையில் உள்ளதாக உள்ளூர் நாளிதழ் ஒன்று படத் துடன் செய்தி வெளியிட்டிருந் தது. இதை மறுத்த அவர் பசுப் பாதுகாப்பகத்தில் அயல்நாடு களில் இருந்து பல்வேறு உப கரணங்கள் வாங்கப்பட்டு அதன் மூலம் பசுக்களை தூய்மைப் படுத்தவும், சரிவிகித உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய் திருப்பதாகவும். பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் பசுப் பாதுகாப்பத்திற்கு வந்து பார் வையிட்டு நற்சான்றிதழ் கொடுத் துள்ளதாகவும் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பெரும் எண் ணிக்கையில் பசுப்பாதுகாப்ப கத்தில் மாடுகள் கொலைசெய் யப்பட்டு புதைக்கப்படுவதாக உள்ளூர் மக்கள் புகார் அளித் தனர். இதனடிப்படையில் விசா ரணை நடத்திய கால்நடை மருத்துவர்கள் பசுப்பாதுகாப்ப கத்தில் நிலையை பார்த்து அதிர்ந்துவிட்டனர். அங்கே பட்டினியாலும், நோயினாலும் 20-திற்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து கிடந்ததை கண்டனர்.  இதனை அடுத்து ஏற்கெனவே இறந்த போன மாடுகள் புதைக் கப்பட்ட இடத்தையும் பார் வையிட்டனர்.

அப்போது கிராமத்தினர் அதிகாரிகளின் முன்பு சாட்சி கூறினார்கள். அவர்கள் கூறிய தாவது: சுதந்திர தினத்தன்று பசுப் பாதுகாப்பகம் அருகே மிகப்பெரிய குழி ஒன்று தோண் டப்பட்டு அதில் மாடுகளை தள்ளிவிட்டு மூடினர். மூடப் பட்ட மாடுகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 200 இருக்க லாம் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக காப்பக காவலாளி ஒருவர் கூறும் போது சுவர் இடிந்து விழுந்து பல மாடுகள் செத்துப் போயின என்று கூறினார்.

துர்க் மாவட்ட கால்நடை மருத்துவ துணை இயக்குநர் சாவ்லா கூறுகையில், தீவனம் இல்லாத காரணத்தால்தான் மாடுகள் இறந்திருப்பது என் பது தற்போதைய சூழ்நிலை யில் உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. இறந்த மாடுகளுக்கு கடந்த இரு தினங்களாக பிரே தப் பரிசோதனை செய்யப்பட் டது. மாடுகள் புதைக்கப்பட்ட தாக கூறப்படும் இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து மண்டல துணை ஆட்சியாளர் ராஜேஷ் ராத்ரே கூறுகையில்,தீவனம் இல்லாமல் கடந்த சில தினங் களாக 200 மாடுகளுக்கும் மேல் இறந்திருக்கும் என்று கிராமத் தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு விரி வான அறிக்கை சமர்ப்பிக்கப் படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.

பசுப்பாதுகாப்பகம் நடத்தி வரும் ஹரீஸ் வர்மா பல்வேறு தனியார் அமைப்புகளிடமிருந்து பசுப் பாதுகாப்பு என்ற பெய ரில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார். இது குறித்த ஆதாரபூர்வமான தகவல் கிடைத்த பிறகு மாநில அரசு இவரது பசுப்பாதுகாப்பத்திற்கு வழங்கப்படும் தொகையை நிறுத்திவைத்துவிட்டது. இதனால் அவர் பசுக்களைப் பட்டினி போட்டு அரசிடம் இருந்து பணம் வாங்கும் முயற் சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் மாநில காவல்துறை இவர் மீது வழக்குப்பதிவுசெய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner