எழுத்துரு அளவு Larger Font Smaller Font


- 'விடுதலை' ஆசிரியர் வெளிப்படுத்திய உணர்ச்சி!


"விடுதலை"யின் ஆசிரியராக 55 ஆண்டுக்காலம் பணி யாற்றி வருகிறேன். 1962ஆம் ஆண்டில் "விடுதலை"ப் பணி மனையில் "விடுதலை" ஆசிரியருக்கான நாற்காலியில் கையை பிடித்து அழைத்துச் சென்று என்னை அமர வைத்தார் தந்தை பெரியார்.

எதிரே உள்ள நாற்காலியில்  அமர்ந்தார் தந்தை பெரியார். குரு - சீடனுக்கு தந்த அங்கீகாரம் இது. அது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு! அதனையடுத்து இன்று ஆயிரத்தொரு "விடுதலை" சந்தாக்களை அளித்து உள்ளீர்கள். 55 ஆண்டுகளில் நான் பெறாத மகிழ்ச்சியை இன்று நான் பெறுகிறேன். நன்றி! நன்றி!! பாராட்டு! பாராட்டு!!

காகிதம் அல்ல ஆயுதம்!

"விடுதலை" வெறும் காகிதம் அல்ல - ஒரு போர் ஆயுதம். மக்களை மாற்றம் அடையச் செய்தது, ஆட்சிகளை மாற்றியிருக்கிறது - அமைச்சர்களை விரட்டியிருக்கிறது, பல நீதிபதிகளை - விரட்டியிருக்கிறது, பல சட்டங்களை மாற்றியிருக்கிறது - புதிய சட்டங்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது.

முன்வரிசையில் நிற்கும் வீரன்!

ஜாதி ஒழிப்பில், மூடநம்பிக்கை ஒழிப்பில், பெண்ணடிமை ஒழிப்பில் முன் வரிசையில் நின்று போராடி வெற்றி பெற்றுள்ளது.

சமூகநீதிக் களத்தில் அதன் சாதனை மகத்தானது. தமிழர் களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியைக் கொடுத் திருக்கிறது - உத்தியோக வாய்ப்புகளைத் தந்திருக்கிறது.

ஒரு வரியையும் விட முடியாது!

ஒரு வரியைக் கூட விடாது படிக்கப்படும் ஏடாக "விடுதலை" இருந்து வந்திருக்கிறது; ஒருவர் படிக்க பலர் கேட்கும் வாய்ப்பும், ஒரு "விடுதலை" பலரையும் படிக்கச் செய்யும் வாய்ப்பும் "விடுதலை"க்கு மட்டுமே உண்டு.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலில் படிக்கும் ஏடு "விடுதலை" ஏதாவது எழுத்துப்பிழை இருந்தால், உடனே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் சுட்டிக் காட்டுவார், ஈரோட்டில் ‘குடி அரசு' குருகுலத்தில் பிழை திருத்தும் பணியிலும் அவர் ஈடுபட்டதுண்டே- அந்த மரபு அவரிடம் எப்பொழுதுமே உண்டு.

குன்றக்குடி அடிகளார் சொன்னார்

விடுதலைப் பணி மனையை 1965இல் திறந்து வைத்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழன் இல்லம் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல் "விடுதலை" தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று பேசினார்.

"விடுதலை" இந்தக் காலகட்டத்திற்கு மேலும் அவசிய மாகத் தேவைப்படுகிறது. மதவாதம், ஜாதியவாதம் தலை தூக்கும் கால கட்டம் இது.

இந்த நேரத்தில் ஒவ்வொரு தமிழரின் கையிலும் "விடு தலை" தவழ வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்!
ஆயிரம் சந்தாக்கள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன என்றால், அதன் பொருள் அறிவு நீரோடை இங்குப் பாயப் போகிறது என்று பொருள், பகுத்தறிவுப் பயிர் வளரப்போகிறது, மூடநம்பிக்கைகள் மடியப் போகின்றன. சமூகநீதி உணர்ச்சி தலை தூக்கப் போகிறது என்று பொருள்.

தயாராகட்டும் போராட்ட வீரர் பட் டியல்!

இவ்வாண்டு நவம்பர் மாதம் நமது இயக்கத்திற்கு முக்கியமானது. 1957 நவம்பர் 26 அன்றுதான் ஜாதியை பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியை தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்று கொளுத்தி பத்தாயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்டு - மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையை ஏற்ற கருஞ்சட்டைப் பாசறை இயக்கம் திராவிடர் கழகம். அதன் 60ஆம் ஆண்டு வரும் நவம்பர் 26.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம்.

தந்தை பெரியார் அவர்களின் உணர்வை ஏற்று அதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார் நமது முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர். சட்டம் இருந்தும் தீர்ப்புகள் இருந்தும், அது செயல்படாமல் இருக்கிறது. அதைச் செயல்படுத்தியாக வேண்டும். ஆயிரம் சந்தாக்களை அளித்துள்ளீர்கள்; அதைப் போல போராட்ட வீரர்களின் பட்டியலைத் தாருங்கள்.

எங்கும் காணாத சாதனை

இந்திய வரலாற்றில் வேறு எங்கும் நடக்காத சாதனையை உரத்தநாடு தோழர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒரு ஒன்றியத்தில் ஆயிரம் சந்தாக்களை வழங்கியது உரத்தநாட்டுக்கு மட்டுமே உரியது

இதைப் பார்த்து மற்ற மற்ற பகுதியினரின், மாவட்ட கழகத்தினர் மத்தியில் ஆரோக்கியமான போட்டி ஏற்படட்டும்  - ஏற்படவும் வேண்டும். அதனை எதிர்ப்பார்க்கவும் செய்கிறேன். ஒற்றுமையுடன் பணியாற்றியிருக்கிறார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, அது தொடரட்டும் - தொடரவும் வேண்டும்.

தேவை ஆரோக்கியமான போட்டி

ஒன்றுபட்டால் இன எதிரிகள் ஒடுங்குவார்கள், துரோகிகள் இருந்த இடம் தெரியாமல் மறைவார்கள். கரையான்களும் புற்றெடுக்க முடியாது, மதவாத சக்திகள் காலூன்றவும் முடியாது!

"விடுதலை"க் கொடி தலை நிமிர்ந்து எங்கெங்கும் பறக்கட்டும்! பறக்கட்டும்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

"விடுதலை"யின் ஆசிரியர் என்ற முறையில் உரத்தநாடு நகர, ஒன்றிய கழகத் தோழர்களை, பொறுப்பாளர்களை சந்தாக்கள் உவப்புடன் அளித்த பொது மக்களை, பெருமக்களைப் பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுக்கு ஊக்கம் ஊட்டியுள்ளீர்கள், ஊட்டச்சத்து கொடுத்துள்ளீர்கள், மாலுமிக்குத் திசை காட்டிபோல உரத்தநாடு  எங்களுக்கு  வழி காட்டியுள்ளது.

காவிரி நீர்ப்பிரச்சினையானாலும் சரி, ‘நீட்' டானாலும் சரி விடுதலை பரவப் பரவத்தான் அதன் ஆளுமை வளர வளரத்தான் இவற்றில் வெற்றிக்காண முடியும். தந்தை பெரியாரின் போர் ஆயுதம் என்பது அந்த பொருளில் தான்
"விடுதலை" படியுங்கள்! "விடுதலை" பெறுங்கள்!

"விடுதலை" படியுங்கள் - "விடுதலை" பெறுங்கள்" என்று கருத்துப்பட உலகத் தலைவர் தந்தை பெரியாரின் மாணாக்கர் தமிழர் தலைவர் "விடுதலை" ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 5.30 மணிக்குத் தொடங்கி 55 மணித்துளி உரையாற்றினார். "விடுதலை" விழா இரவு 9.20 மணிக்கு நிறைவுற்றது.


ஒரு விண்ணப்பம்

"தோழர்களே, பகுத்தறிவாளர்களே, சமுகநீதி விரும்பிகளே இனஉணர்வு வேட்கையாளர்களே, உங்களுக்கு ஒரு விண்ணப்பம் ஒவ்வொருவரும் விடுதலை சந்தாதாரர் ஆகுங்கள். அதன் மூலம் தான் நாம் நமது உரிமைகளை மீட்கமுடியும். விடுதலை பெற முடியும். இது எனது அன்பான வேண்டுகோள் - ஏன் விண்ணப்பமும் கூட"

- விடுதலை விழாவில்
விடுதலை ஆசிரியர் கி.வீரமணி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner