எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தமிழக அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் - ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வற்புறுத்தி தமிழக அரசை வலியுறுத்திட, நாளை அரசு ஊழியர்களின் முக்கிய அமைப்பான ஜாக்டோ சார்பில் அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது நியாயமான கோரிக்கைகளை மனித நேயத்துடன் பரிசீலித்து - அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதுதான் சரியான அணுகு முறையாகும்.

அந்தப் படிக்கில்லாமல், அவர்கள் அடையாள வேலை நிறுத்தம் (ஒருநாள்) செய்தால்கூட சம்பளத்தைப் பிடிப்போம் என்று தலைமைச் செயலாளரான அய்.ஏ.எஸ். அதிகாரியை விட்டு மிரட்டுவது, எரியும் தீயை அணைப்பதற்குப் பதிலாக, அதில் நெய் ஊற்றிய கதையாகத் தான் முடியும்.

எனவே அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை - அனுதாபத்துடன் - நியாயமான முறையில் ஆராய்ந்து, செயல்படுத்துவதே ஜனநாயக ஆட்சியின் பெருமையாகும்.
தமிழக அரசு செய்ய முனைய வேண்டும்.

சென்னை                                                                         - கி.வீரமணி
21.8.2017                                                            தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner