எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பல்வேறு பழங்குடியின அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாக்கும் போது, தன்னை நிலைநிறுத்திக் கொள் ளும் வழிமுறைகளில் ஒன்றாக தன் சமய வட்டத்திற்குள் பழங் குடிகளின் தெய்வங்களும் இணைத்துக் கொள்ளப்படும்.

அந்த வகையில் குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமய மாக விளங்கிய பிராமணியச் சமயம், சூத்திரர்களின் கடவு ளான பிள்ளையாரைத் தன் னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்கினங் களை உருவாக்கும் விநாயகர், விக்கினங்களைப் போக்குப வராக மாறினார்.

பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்க கால அடை யாளம் மறைந்து பிராமணியச் சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார். சிவனுடன் அவரை தொடர்புபடுத்தும்.

பிரபஞ்சம் நீ!

மண் - தீ - காற்று -

வானம் - நீ!

நீ பிரம்மன்!

நீ விஷ்ணு

நீ உருத்திரன்!

மும்மூர்த்திகளுக்கும் நீ முதல்வன்!

என கணபதியைத் துதிக் கும் வடமொழிச் சுலோகங் களும் உருவாயின (சட்டோ பாத்தியாயா; 135).

எவனொருவன் கணேச ஸ்தோத்திரத்தை எட்டுப் பிர திகள் எடுத்து எட்டுப் பிராம ணர்களுக்குக் கொடுக்கிறா னோ அவன், கணேசன் அரு ளால் கல்வி கேள்விகளில் வல்லவனாவான்' (மேலது) என்று நாரதர் புராணம் குறிப் பிடுகிறது.

விலை உயர்ந்த ஆடை அலங்காரங்கள் வினாயகரை வந்தடைந்தன. ஆயினும் இம்மாற்றங்கள் பிள்ளையாரின் பூர்வீகத்தை முற்றிலும் மறைத்து விட வில்லை.

ஆகம விதிகளின்றியே அவரை நிறுவி வழிபடுதல், அவரைத் தண்டித்தல் ஆகி யன பழங்குடிக் கடவுளாக அவர் இருந்தமையின் எச்சங் களாகும்.

- ஆ. சிவசுப்பிரமணியன்

(நூல்: "பிள்ளையார் அரசியல் மத அடிப்படை வாதம் பற்றிய கட்டுரைகள்" பாகம் 52)

இதில் ஒன்றை கவனிக்கத் தவறக் கூடாது. கடவுளையும்  பார்ப்பனர்களையும் முடிச்சி போட்டுள்ள அந்த நச்சுப் பொடிதான் முக்கியம்.

கணேச ஸ்தோத்திரத்தை எட்டுப் பிரதிகள் எடுத்து எட்டுப் பார்ப்பனர்களுக்கு கொடுக்க வேண்டும். மற்றவர் களுக்கு கொடுத்தால் பிள்ளை யார் கண்ணைக் குத்திடுவாரா? குடிசைகள், தாழ்த்தப்பட்டோர் பகுதிகளில் விநாயகர் பொம் மைகளை வைக்கும் ஒடுக்கப் பட்ட மக்களே சிந்திப்பீர்.

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner