எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜக தலைவர்கள் அதிர்ச்சி

கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி கருத்துக்கணிப்பில் தகவல்

பெங்களூரு, ஆக. 23- கர்நாடகா வில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக் கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் வருகிற 2018-ஆம் ஆண்டு மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடை பெற உள்ளது.

இதனால் மொத்தமுள்ள 225 தொகுதிகளிலும் அனைத்துக் கட்சியினரும் ஆரம்பக் கட்ட தேர்தல் பணிகளை தொடங்கி யுள்ளனர். காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகள் தேர்தல் வியூ கங்களை வகுத்து வருகின்றன.

இந்நிலையில் 'சி - போர் என்கிற ஆய்வு அமைப்பு நடத் திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், கடந்த ஜூலை 19ஆ-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 165 தொகுதிகளில் 24 ஆயிரத்து 676 பேரிடம் தேர்த லில் எந்த கட்சிக்கு ஆதரவு என கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பின் முடி வில் காங்கிரஸ் கட்சி 120 முதல் 132 இடங்களில் வெற்றி பெறும் என தெரியவந்தது.

பாஜக 60 முதல் 72 இடங் களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். முன் னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 24 முதல் 30 இடங்களில் வெற்றி பெறும் என தெரியவந் துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு 43 சதவீதமும், பாஜகவுக்கு 32 சதவீதமும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 17 சதவீத வாக்குகளும் கிடைக் கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அண்மையில் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, வரும் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்பார் என உற்சாகமாக அறிவித்தார். இந்நிலையில், கருத்துக் கணிப் பில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பது அக்கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவே ளையில் காங்கிரஸ் தலைவர் கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner