எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆரல்வாய்மொழி, ஆக. 23- கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி, வடக்கு  பெருமாள்  புரத்தில்  உள்ள  முத்தாரம்மன்  கோவில்  மற் றும்  அதன்  அருகில்  உள்ள  உச்சிமா காளி அம்மன்  கோவி லிலும் திருடர்கள்  கோவில் கதவை  உடைத்து  உள்ளே சென்று  உள்ளே  இருந்த  உண் டியலை உடைத்து  அதனுள்  இருந்த  பணத்தை  திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து  கோவில் நிர்வாகிகள்  ஆரல் வாய்மொழி  காவல் நிலையத் தில் புகார் செய்தனர்.  இதை யடுத்து  காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து  விசா ரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்

ஆலந்தூர், ஆக. 23-- மடிப் பாக்கம் மூவரசம் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள பால கணபதி கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப் பட்டு இருப்பதை இன்று காலை பார்த்த அப்பகுதி மக் கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். சில நபர்கள் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

இதேபோல் அருகில் உள்ள அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து உள்ள னர். அதில் பணம் குறைவாக இருந்ததால் கருவறை கதவை உடைத்து அங்கு பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner