எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, ஆக. 23- மேற்கு வங்கத்தின் மால்டா மாவட் டத்தில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை திங்கள் கிழமை நேரில் பார்வையிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி.

மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவ தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு இதுவரை 152 பேர் பலியானதாகவும், 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள் ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் மேற்கு வங்கத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இயற்கை பேரிடரை எவராலும் தடுக்க முடியாது. அதேநேரத்தில் அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை நாம் மேற் கொள்ளலாம். அந்த வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும், ஆறுகளில் வெள் ளம் கரைபுரண்டோடுவதால் அதன் உபரி நீர் அனைத்தும் சாலைகளுக்கு வந்துவிட்டது. அதன் காரணமாகவே பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

மழை வெள்ளத்துக்கு மேற்கு வங்கத்தில் இதுவரை 152 பேர் பலியாகினர். 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். குஜராத் மற்றும் அஸ் ஸாம் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை மத்திய அரசு வழங் கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. பேரிடரால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை மறுப் பதற்கில்லை. அதேவேளையில் குஜராத், அசாம் போன்ற மாநி லங்களுக்கு நிகரான வெள்ள பாதிப்பை மேற்கு வங்கமும் சந்தித்துள்ளது. எனவே, நிவா ரண உதவிகள் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது.

வெள்ளத்தால் மேற்கு வங் கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப் பைக் கணக்கிட்டு சேத மதிப்பு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதன் அடிப் படையில் நிவாரண நிதியை அரசு ஒதுக்கும் என்ற நம் பிக்கை உள்ளது என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner