எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஆக. 24- பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நிதி முறை கேடுகள் நடைபெறுகின்றன என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரியாணா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அரசு கோசாலைகளில் பசுக்கள் துன்புறுத்தப்படுகின்றன. இதனால், பசுக்கள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரில், அரசின் நிதி கையாடல் செய்யப்படுவதே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாகும்.

பாஜக ஆட்சியில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை. அந்த நிலைமை, தற்போது பசுக் களுக்கும் ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்த உயிரிழப்பு தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் ஆர்எஸ் எஸ் அமைப்பு ஏன் விளக்கம் கேட்கவில்லை? ராமர் கோயில் விவகாரத் தைப் போலவே, பசு பாதுகாப்பையும், ஓர் அரசியல், மதவாத, ஜாதிய பிரச்னையாக பாஜக கருதுகிறது. உண்மையில், நாட்டில் பதற்றமான, அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கவே, பசுக்களை கொன்ற தாகக் கூறி, சிலர் மீது பசு பாதுகாவலர்கள் வன்முறை நிகழ்த் துகிறார்கள். எனவே, அரசின் கோசாலைகள், இறைச்சிக் கூடங்களாக மாறாமல் இருப்பதற்கு பசுப் பாதுகாப்பு தொடர் பான சட்டதிட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். அந்த மறு ஆய்வு, மக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தாத வகையிலும், குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்தாத வகை யிலும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner