எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு, ஆக. 24- தும்கூரு வில் கர்நாடக மாநில காங்கி ரஸ் தலைவர் பரமேஸ்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசு நிலத்தை சட்ட விரோ தமாக விடுவித்ததால் எடியூ ரப்பா மீது ஊழல் தடுப்புப் பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எடியூ ரப்பா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கும், கர்நாடக மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக மாநில அர சும், முதல்வர் சித்தராமையா வும் தான் காரணம் என்று பா.ஜ.க.வினர் தேவையில்லா மல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கார ணங்களுக்காக இந்த விவகா ரத்தை பா.ஜ.க.வினர் பெரிது படுத்துகிறார்கள். காங்கிரஸ் அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசிய மில்லை.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தகவல் வந்துள்ளது. அந்த கருத்துக் கணிப்புக்கும், அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, பெங்களூருவுக்கு வந்து கட்சித் தலைவர்களுடன் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசித்துவிட்டு சென்றுள்ளார். அமித்ஷாவின் ராஜ தந்திரங்கள் உத்தரப்பிர தேசம், பீகார் உள்ளிட்ட மாநி லங்களில் வேண்டுமானால் வெற்றியை தேடித்தந்திருக்க லாம். ஆனால் கர்நாடகத்தில் அமித்ஷாவின் தந்திரங்கள் எடுபடாது.

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டு வருவதாக அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கூறி வரு கிறார்கள். கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் முதல்வர் மீதோ, அமைச்சர்கள் மீதோ எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் யாரும் ஊழல் வழக்குகளில் சிக்கவில்லை. அமித்ஷா, எடியூரப்பா, கட்டா சுப்பிரமணிய நாயுடு தான் ஊழல் வழக்குகளில் சிறைக்குச் சென்று வந்துள்ளனர். அதனால் ஊழலுக்கு எதிராகப் பேசுவ தற்கு பா.ஜ.க.வினருக்கு எந்தத் தகுதியும் கிடையாது. காங்கி ரஸ் அரசை குறை கூறுவதையும் பா.ஜ.க.வினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறி னார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner