எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சாதனையோ சாதனை!
திறமைக்கே பெயர் பெற்ற நிருவாகம் என்று பிரதமர் மோடி, தன் முதுகை தானே தட்டிக் கொள்கிறார். இவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து தொடர்ந்து இரயில் விபத்துகள் - சாலை விபத்துக்கள். இரயில் விபத்துகளுக்குக் காரணம் 1.42 லட்சம் பாதுகாப்புப் பிரிவு பணியிடங்கள் காலியாக இருப்பதுதான்.
இதுதான் மோடி அரசின் சாதனையோ சாதனை!

- - - - -

காலியோ காலி!

முதுநிலைப் பொறியியல் படிப்பில் 82 விழுக்காடு இடங்கள் கல்லூரிகளில் காலியாம். ஏனிந்த நிலை? வேலை வாய்ப்பை உருவாக்காதது தானே. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டு ஒன்றுக்கு இரண்டரைக் கோடி பேர்களுக்கு வேலை கொடுப்போம் என்று 56 அங்குல மார்தட்டியவர் இதற்கு என்ன பதில் சொல்வாராம்?

- - - - -

கிரீமிலேயர்

மத்திய அரசுத் துறையில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்திரா சகானி வழக்கில் இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்பதோடு கிரீமிலேயர் என்ற ஒரு தடையையும் கொண்டு வந்தது.

ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருந்தால், அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று கூறி பல முறை வருமான அளவு உயர்த்தப்பட்டு கடைசியாக ரூ.ஆறு லட்சமாக இருந்தது; அதனை எட்டு லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பார்க்கப்பட வேண்டும்என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடு! பொருளாதார வரம்பு என்ற அளவுகோல் - முதல் சட்டத்திருத்தத்தின் போதே நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் அப்படி ஒரு கருத்தைத் திணித்ததே - சட்டப்படி சரியானதது தானா என்பது முக்கிய கேள்வி. நிரந்தரமாகக் கிரீமிலேயரை நீக்கினால்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்கள் பூர்த்தியாகும் என்பது நினைவில் இருக்கட்டும்!

- - - - -

விலைப்பேசவா?

தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. தலைவர் வரும் பொழுது பல கட்சிகளிலிருந்தும் முக்கிய தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைவார்களாம்.

பா.ஜ.க.வின் சமூக நீதிக் கொள்கைக்காகவா, மதச் சார்பின்மை கொள்கைக்காகவா? அரசியலில் போணி ஆகாதவர்கள், எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் விலை பேசப்படக்கூடும். அதைவிட அவர்களுக்குத் தற்கொலை ஒப்பந்தம் இருக்க முடியாது - இருக்கவே முடியாது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner