எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக. 24- கடல்சார் ஆராய்ச்சிக்காக அய்.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண் வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம்(இஸ்ரோ) முடிவு செய் தது. அதன்படி ஏற்கெனவே 7 செயற்கைகோள்களை திட்ட மிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடையவிருப் பதை தொடர்ந்து, புதிதாக அய்.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

இதனை ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட் டுள்ளது.

320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் அய்.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவி லேயே வடிவமைக்கப்பட்டுள் ளது. பூமியில் இருந்து குறைந்த பட்சம் 284 கிலோ மீட்டர் உய ரத்திலும், அதிகபட்சம் 20 ஆயி ரத்து 657 கிலோ மீட்டர் உயரத் திலும் நிலை நிறுத்தப்படுகிறது.

இதன்மூலம் இயற்கைச் சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். ராக் கெட்டை ஏவுவதற்கான பணி களில் தீவிரமாக இறங்கியிருப் பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner