எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஆக. 24- ஆதார் அடையாள அட்டை தொடர் பாக உச்சநீதிமன்றத்தில் பல் வேறு தரப்பினரும் வழக்கு களை தொடுத்தனர். அதில், அரசியல் சாசனத்தின்படி ஒரு வரின் தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமையா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்வி குறித்து விசாரித்து முடிவெடுப்பதற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில் அரசி யல் சாசன அமர்வு அமைக் கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலிநாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர். கே.அகர்வால், ஜே.செல்ல மேஸ்வர் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்த விசாரணையின்போது, கரக் சிங் மற்றும் எம்.பி. சர்மா ஆகியோர் வழக்குகளில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு ஆராயப்பட்டது. விசா ரணை முடிந்து கடந்த இரண் டாம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த தீர்ப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி அன்று அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தனி மனித ரகசியக் காப்புரிமை அடிப் படை உரிமையே என்று உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு அளித்து ள்ளது. இந்த தீர்ப்பு ஆதார் வழக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தும்  என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்தத் தீர்ப்பு இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்ற னர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner