எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

என் நீண்ட கால நண்பர் இலக்குமணன். அவரது அக்கா மகள் (பதிமூன்று வருடம் கழித்து பிறந்த ஒரே மகள்) மேனகை பன்னிரெண்டாம் வகுப்பில் 1182/1200 மதிப்பெண் பெற்றாள்.

ஆறுவயதில் மாறுவேட போட்டியில் மருத்துவராக மாறுவேடமிட்டு முதல் பரிசு பெற்றவள், நாடி நரம்பெல்லாம் மருத்துவராக வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். உத்தமபாளையம் அரசு பள்ளியில் படித்தவள் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாள்.

தமிழக அரசு நிச்சயம் நல்ல முடிவை சொல்லும் என்று நம்பிக்கையோடு இருந்தாள். தமிழகத்திற்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு என்று நிர்மலா சீதாராமன் தொலைக்காட்சியில் பேசியதை பார்த்துவிட்டு துள்ளி குதித்திருக்கிறாள்.

கலந்தாய்வுக்கு காத்திருந்தவள் இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேட்டு தன் பாட்டி வீட்டில் தூக்கு போட்டு தற் கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.

மேனகைகள் கதறி அழுகிறார்கள், விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள், ஒரு தலைமுறையின் மருத்துவ கனவு சூறையாடப்பட்டிருக்கிறது.

- வல்லம் பசீர், முகநூலிலிருந்து...

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner