எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஆக. 25- -ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் தமிழ் நாடு உட்பட 11 மாநிலங்கள் இந்த நிதி ஆண்டில் கடுமை யான வருவாய் இழப்பை சந் திக்கும் என்றும், இதனால் மத் திய அரசிடம் இருந்து சுமார் 9,500 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பீடு பெறும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு கிட்டத் தட்ட இரண்டு மாதங்கள் முடி யும் தருவாயில், ஒரு தனியார் நிறுவனம் எடுத்த புள்ளி விவ ரப்படி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் 2018-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டு மொத்த வரு வாய் வளர்ச்சி விகிதம் 2016-ஆம் ஆண்டை விட 16.6 சத விகிதம் அதிகமாக இருக்கும் என்றும் அதே நேரத்தில், தமிழ் நாடு உட்பட 11 மாநிலங்கள் இந்த நிதி ஆண்டில் கடுமை யான வருவாய் இழப்பை சந் திக்கும் என்றும் தெரிய வந்து உள்ளது. இதனால் மத்திய அரசிடம் இருந்து சுமார் 9,500 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பீடு பெறும்நிலைக்கு தமிழகம் தள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரப் பளவில் பெரிய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ் கர், குஜராத், இமாச்சலப் பிர தேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் பஞ்சாப் போன் றவற்றுக்கு உத்தேசமாக 5600 கோடி ரூபாயும், சிறிய மாநி லங்களான கோவா, ஜார்க் கண்ட், ஜம்மு - காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு சுமார் 3900 கோடி ரூபாயும் இழப்பீடு தேவைப்படும் என்றும் தனி யார் நிறுவனமானது தனது ஆய்வில் கணித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner