எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையில் பெரியார் திடலில்  
ஒரே நாளில் இருபெரும் மாநாடுகள் எழுச்சிக்கோலம் பூண்ட காட்சி!
மாநில அதிகார மீட்பு மாநாட்டில் உரிமை முழக்கம்

சென்னை, ஆக.25 சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று (25.8.2017)  காலை 10.30 மணியளவில் இருபெரும் மாநாடு கள் எழுச்சியுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையில் தொடங்கியது. மாநில மாண வரணி செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் இணைப்புரை வழங் கினார். திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன் வரவேற் றார். மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தொடக்கவுரை ஆற்றினார்.

மாட்டிறைச்சிக்குத் தடை விதித்து உணவு உரிமை பறிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படாத அலட்சியப்போக்கால் காவிரி நதிநீர் உரிமை பறிப்பு, மாநிலங்களின் உரிமையாக இருந்த கல்வியை ஒத்தி சைவுப்பட்டியலில் வைத்து, அய்ந் தாம் வகுப்பிலேயே இரு முறை தேர்ச்சி அடையவில்லை என்றால், அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மாணவர் கள் கல்வியைத் தொடர முடியாமல் தடுப்பது, தொழிற்கல்வி முறையை பள்ளி சிறார்களிடம் புகுத்துவதன்மூல மாக  மறைமுகமாக குலக்கல்வித்திட் டத்தை புகுத்துவது, மருத்துவ மாண வர் சேர்க்கையில் சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தின்படி Ôநீட்Õ நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளின் மருத்துவக் கல்வி உரிமை பறிப்பு, கீழடி உள்ளிட்ட அகழ்வாய் வுப்பணிகளை முடக்கி, தமிழர் வர லாறு இருட்டடிப்பு, இந்தி, சமஸ் கிருத மொழிகளைத் திணிப்பதன்வாயிலாக Ôமொழி உரிமைப் பறிப்புÕ உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வா ளர்கள், அறிஞர் பெருமக்கள் விரிவாக பல்வேறு தகவல்களை ஆதாரங்களு டன் மாநிலங்களின் உரிமைகளை மறுக்கின்ற மத்திய அரசின் தொடர் செயல்பாடுகளை எடுத்துக்காட்டி உரையாற்றினார்கள்.

திராவிடர் கழகப் பிரச்சாரச் செய லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி Ôஉணவு உரிமையிலும் மூக்கு நுழைப்புÕ எனும் தலைப்பிலும், பேராசிரியர் அ. மார்க்ஸ் Ôகாவிரி நதிநீர் உரிமைப் பறிப்புÕ எனும் தலைப்பிலும்,  பொதுப் பள்ளிக்கான மேடை அமைப்பின் தலைவர்  கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு Ôகல்வியில் தலையீடுÕ எனும் தலைப்பிலும், பேராசிரியர் மறைமலை இலக்குவனார் Ôதமிழர் வரலாறு இருட்டடிப்புÕ எனும் தலைப்பிலும்,  திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரி யர் அ. இராமசாமி Ôமொழி உரிமைப் பறிப்புÕ எனும் தலைப்பிலும் உரை யாற்றினார்கள்.

மாநில அதிகார மீட்பு மாநாட்டின் தலைவர் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுச்சியுடன் தொடங்கிய மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினார். சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா. மணி யம்மை நன்றி கூறினார். மேனாள் நீதிபதி அரி பரந்தாமன், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்பட ஏராளமானவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner