எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி நீர் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் துரோகம் - ‘நீட்' மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

தஞ்சையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது

சென்னை, ஆக. 26- காவிரி நீர் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் துரோகம், ‘நீட்' என்று கூறி மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசின் எதேச்சதிகாரம் இவற்றைக் கண்டித்து இன்று (26.8.2017) தமிழகம் முழு வதும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார் பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மத்திய - மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

கருநாடகத்தின் சூழ்ச்சித் திட்டம்

கருநாடக அரசின் மேகதாது அணை கட்டும் புதிய திட்டம் _ ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பங்கீட்டினைத் தடுக்கும் கருநாடக அரசுக்கு, மேலும் நல்வாய்ப்பாகும் ஒரு சூழ்ச்சித் திட்டமாகும்!

கூடுதல் மின்சார உற்பத்தி என்றெல்லாம் கருநாடகத் தரப்பில் வாதிடப்பட்டாலும், மேட்டூருக்கு வரும் கொஞ்ச நஞ்ச தண்ணீரைக்கூட வரவிடாமல், தமிழ் நாட்டை முழுப்பாலைவனமாக ஆக்கி, டெல்டா விவசாயிகளை நிரந்தரப் பிச்சைக்காரர்களாக்கி, வறுமைப்படு குழியில் தள்ளுவதற்கான பேரபாயமானதொரு திட்ட மாகும்!

தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு

இத்தகையதொரு ஆபத்தான மேகதாது அணைத்திட் டத்திற்கு, தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ் நாடு அரசு என்ற மைனாரிட்டி அதிமுக அரசு சார்பில் ஆஜரான அதன் வழக்குரைஞர் அந்த அணையை கரு நாடக அரசு கட்டிக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல்" - இசைவு தெரிவித்திருப்பது, டெல்டா விவசாயிகள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதற்குச் சமமான கொடுமையாகும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner