எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நீதிமன்றம் அறிவுறுத்தல்

குஜராத், ஆக. 27-  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு குஜராத்தின் நரோடா பகுதியில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர் பான வழக்கை நான்கு மாதங் களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றதற்குப் பிறகு குஜ ராத்தின் பல பகுதிகளில் முசு லிம்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. இதில் ஆயிரக்கணக் கானோர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவற் றில் நரோடா கம் பகுதியில் நிகழந்த கலவரமும் ஒன்று. அதில் 11 பேர் கொல்லப்பட் டனர். பலர் காயமடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை குஜராத் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, குஜராத் கலவர வழக்குகளின் மீதான விசாரணை நிலவரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு வெள்ளிக் கிழமை விளக்கமளிக்கப்பட் டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலை மையிலான அந்த அமர்வில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நரோடா கம் வழக்கில் குற் றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரு வதாகவும் நீதிமன்றத்தில் அப் போது தெரிவிக்கப்பட்டது.
அதைக் கேட்டறிந்த நீதி பதிகள், இரு மாதங்களுக்குள் சாட்சியங்களைப் பதிவு செய்யு மாறு கீழமை நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தினர்.

மேலும், நான்கு மாதங்க ளுக்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குமாறும் வலியு றுத்தினர்.

இதைத் தவிர குஜராத் கல வரம் தொடர்பான பிற வழக்கு களின் விசாரணை நிலவரங்கள் குறித்தும் நீதிபதிகளிடம் எடுத் துரைக்கப்பட்டது. அதுதொடர் பாக சில அறிவுறுத்தல்களை அப்போது சம்பந்தப்பட்ட தரப்பிடம் நீதிபதிகள் தெரிவித் தனர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner