எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ராய்ப்பூர், ஆக. 27- சத்தீஸ்கர் மாநிலத் தில்  பால் தராத பசு மாடுகளை பரா மரிக்காமல் கைவிடுவதை தடுப்பதற் காக, ஓர் அமைப்பை உருவாக்கி, அரசே பசு மாட்டின் மூத்திரத்தை விலை கொடுத்து வாங்க முடிவு செய்துள் ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுவதை மற்றும் மாட்டிறைச்சியின் பெயரால் பசுப்பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்கிவருகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில், பசுப்பாதுகாப்பு திட்டத்தில் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநில அரசு தீவிரமாக உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பால் தராத பசு மாடுகளைக் கைவிடுகின்ற மக்க ளின் செயலை தடுக்கும் நோக்கில் பசு மாட்டு மூத்திரத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு ஓர் அமைப்பை பாஜக அரசு உருவாக்கியுள்ளது.

பாஜக பொறுப்பாளர் நடத்தி வந்த மூன்று கோசாலைகளில் 200 பசு மாடு கள் உயிரிழந்த தகவல் வெளியானதை அடுத்து, சத்தீஸ்கர் மாநில பாஜக அரசின்மீது விமர்சனங்கள் வெளியா னதை அடுத்து, அரசின் திட்டங்களில் ஒன்றாக பசுப்பாதுகாப்பை அம்மாநில முதல்வர் ரமன்சிங் அறிவித்துள்ளார்.

கவ் சேவா ஆயோக் எனும் அமைப்பின் தலைவர் விஸ்வேஸ்வர படேல் கூறுகையில், “பசு மாட்டின் மூத்திரத்தை ஒரு லிட்டர் ரூபாய் 10 என்கிற அளவில் விலை கொடுத்து வாங்குவதற்கான பரிந்துரையை அர சுக்கு அளித்துள்ளோம். அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பயன்கருதி, தெருவில் உள்ள பசு மாடுகளைக்கூட அவரவர் வீடுகளில் வைத்து பாதுகாப்பார்கள். ஒரு லிட் டர் பசு மாட்டின் மூத்திரத்துக்கு ரூ. 5 அல்லது ரூ.7 அளிப்பதாகக் கூறிவிட்டால்கூட, பசு மாடுகளை யாரும் கைவிட மாட்டார்கள்.  அமிர்த பாணியை (பசு மாட்டு மூத்திரம்) பூச்சிக் கொல்லியாகவும், உரமாகவும் பயன்படுத்தும்போது, களர் நிலம்கூட தரமான விளைநிலமாக மாறிவிடும் அதிசயத்தைக் காணலாம். அண்மை யில் மாநிலத்தில் பசுக்கள் உயிரிழந்த தையடுத்து, தீவிரமாக கண்காணிக் கின்ற பணிகளை செய்து வருகிறோம். மாநிலத்தில் உள்ள அனைத்து கோசா லைகளையும் தீவிரமாக கண்காணித்து, தேவையான விழிப்புணர்வு மற்றும் அவசியமான கட்டமைப்பை உரு வாக்குவதில் கவனம் செலுத்துகி றோம்’’ என்று கூறினார்.

“இந்து சமாஜ் பாஜக அரசாக மாநில அரசு இருப்பதால், பாஜகவைச் சேர்ந்த பொறுப்பாளரின் கோசாலை களில் பசு மாடுகள் உயிரிழந்ததற்காக, நாங்கள்தான் உரிய நடவடிக்கையை எடுத்துள்ளோம்.  அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பசு மாடுகள் உயிரிழந்தமைக்காக பாஜக பொறுப்பாளர் ஹரீஷ் வர்மா கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார். கோசாலைக்கு அளிக்கப்பட்ட ரூ. ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம் தொகையை அவர் கோசாலைக்கு பயன்படுத்த வில்லை என்ற குற்றச்சாற்று ஹரீஷ் வர்மா மீது உள்ளது” என்றும் படேல் கூறியுள்ளார். ஆனால் ஹரீஷ் வர்மா அரசுமீது குற்றம் சாற்றியுள்ளார். கால் நடைகளுக்கு அளிக்க வேண்டிய தீவ னத்துக்குரிய நிலுவையில் உள்ள தொகையை அரசு வழங்காமல் கிடப் பில் போட்டது. அத்தொகையை வழங் குவதற்காக படேல் கையூட்டு கேட் டார் என்று கூறியுள்ளார்.

ஹரீஷ் வர்மா கூறியுள்ள குற்றச் சாற்றுக்கு பதில் அளித்த படேல் கூறும் போது, “எனக்கு எதிராக கூறப்படு பவை அடிப்படை ஆதாரமற்றவை. ஹரீஷ்மீது வழக்கு பதிவு செய்யப் பட்டதையடுத்து ஊடகங்களை தவ றாக வழிநடத்துகிறார். எனக்கு பசு மாதா (தாய்) ஆகும். அதுபோன்ற செயலை நான் எப்போதும் செய்ய மாட்டேன்” என்றார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரமன்சிங் தலையிலான பாஜக அரசு அமைந்த பிறகு, பசுப் பாதுகாப்புத் திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறது. மாநில அர சின் துணையுடன் பசுப்பாதுகாவலர்கள் என்று தங்களைத் தாங்களே அறிவித் துக்கொள்பவர்கள் அப்பாவி மக்கள் மீது  இறைச்சிக்காக பசு மாட்டைக் கொல்கிறார்கள் என்றும், மாட்டிறைச் சியை சாப்பிடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டு வன்முறைத் தாக்குதல் களை நடத்தி வருகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன. அண்மையில் பாஜக முதல்வர் ரமன்சிங் கூறும்போது கூட,  பசு வதையில் ஈடுபடுவோர் தூக்கி லிடப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே பசு வதையில் ஆயுள் தண் டனை அளிக்கப்படும் என்று சட் டத்தை திருத்தி நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மருத்துவமனையிலேயே உயிர்காக்கும் ஆக்சிஜன் பற் றாக்குறையால் நூற்றுக்கணக்கிலான குழந்தைகள் உயிரிழந்தார்கள். அதே போன்று, சத்தீஸ்கர் மாநிலத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூன்று குழந்தைகள் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்கள்.

மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் பாஜகவினர் குழந்தைகளை, மக்களைக் காப்பதை தங்களின் கட மையாகக் கருதாமல், பசு மாட்டை தாய் என்று கூறிக்கொண்டு ஆட்சி அதிகாரங்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்திவருவதை வாடிக்கையா கக் கொண்டு செயல்பட்டு வருகிறார் கள். சத்தீஸ்கர் அரசின் பசு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் 92 லட்சம் மாடுகள் உள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகு திகளில் 115 கோசாலைகள் அமைக்கப் பட்டுள்ளன.

பசுப்பாதுகாப்புக்கென ஓர் அமைப்பை சத்தீஸ்கர் மாநில பாஜக அரசு ஏற்படுத்தி, அவ்வமைப்பின் மூலமாக பசு மாட்டின் மூத்திரத்தை பெற்று, உரங்கள், பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சியை செய்வதென முடிவு செய்துள்ளது.

பசு மாட்டின் மூத்திரத்திலிருந்து மருந்து உள்ளிட்ட பிற பயன்கள் உள் ளதாகக் கூறப்படுபவை நிரூபிக்கப்பட வில்லை என்று கூறி அறிவியலாளர்கள் அக்கூற்றை ஏற்க மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner