எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மதுரை, ஆக. 28- மதுரையில் பெரியார் நகர், கே.புதூர், அவனியா புரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நாள் தோறும் குடிநீருக்காக தொடர்போராட்டங்கள் நடந்து வருகின்றன. வில்லாபுரத்தில் 100 க்கும் அதிகமான பெண்கள் தண்ணீர் கேட்டு ஆகஸ்ட் 23 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்பேட்டை, முனிசாலை ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 24 அன்று தண்ணீர் கேட்டு பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆண்டாள்புரம், விராட்டிபத்து, உத்தங்குடி ஆகிய பகுதிகளில் தண்ணீர் கேட்டு பெண்கள் சுதந்திர தினத்தன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி மதுரை, நெல்லை நெடுஞ்சாலையை மறித்து திருப்பரங்குன்றம் மக்கள் குடிநீர் கேட்டு போராடினர்.இதனால் 3 மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது, இந்த நிலையில் 27 ஆம் தேதி காலை மதுரை செல்லூர் பகுதியில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்காக மதுரை மாநகராட்சி வைகை நதியில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு பெரிய பள்ளம் தோண்டி நூற்றுக்கணக்கான குடிநீர் லாரிகள் மூலம் நீர் கொண்டுவந்து அங்கே ஊற்றினார் கள். இதைப் படமெடுத்த சிலரை காவல்துறையி னரும், மாநகராட்சி ஊழியர்களும் விரட்டிவிட்டனர். இந்த நிலையில் வேடிக்கைப் பார்த்த ஒருவர் இந்த காட்சியை தன்னுடைய கைக்பேசி மூலம் படம் பிடித்து சமூகவளைதளத்தில் வெளியிட்டார்.

மதுரையில் கோடைகாலத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் போது, வைகை நீர்வரத்தின்றி இருக் கும் போதுதான் தேனி மற்றும் கம்பம் போன்ற பகுதி களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து ஆற்றில் ஊற்றுவது வழக்கம். ஆனால் தற்போது பிள்ளையார்சிலை கரைக்கவும் மதுரை மாநகராட்சி குடிநீரை வீணடிக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner