எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கொல்கத்தா, ஆக.29 வருகிற 2019-ஆம் ஆண்டு மக்க ளவைத் தேர்தலில் பாஜகவை நாட்டை விட்டு அகற்ற சூளு ரையேற்க வேண் டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பின் சார்பில் கொல்கத்தாவில் திங்கள்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மம்தா பானர்ஜி பேசியதாவது:

நாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்கு பதிலாக அவர்களை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் மோடி தலைமையிலான பாஜக அரசு முன்னெடுத்து வருகிறது. மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் மக்களைப் பிரித்து வைப்பதுதான் பாஜகவின் பிரதானக் கொள்கையாகும்.

அவர்களின் இந்த பிளவுபடுத்தும் அரசியலை மேற்கு வங்கத்திலும் புகுத்த பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயன்று வருகிறது. துர்க்கை சிலைகளை அக்டோபர் 1-ஆம் தேதியன்று நதிகளில் கரைக்க மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது.

அன்றைய தினம் "ஏகாதசி' என்பதாலேயே இந்த முடிவை எனது அரசு எடுத்தது. ஆனால், அன்று மொகரம் பண்டிகை என்பதால்தான், இத்தகைய தடை உத்தரவை அரசு பிறப்பித்திருப்பதாக பாஜக விஷமத்தனமான வதந்தியைப் பரப்பி வருகிறது.

மேற்கு வங்கத்தில் இந்துக்களுக்கும், இஸ்லாமி யர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயத்தைப் பெறுவதற்கு பாஜக முயலுகிறது. பாஜகவின் இந்த தந்திரங்கள் மேற்கு வங்கத்தில் எடுபடாது. அக்கட்சியின் சித்தாந் தங்களை மேற்கு வங்கத்துக்குள் திரிணாமுல் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.

வருகிற 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை நாட்டை விட்டே அகற்ற நாம் சூளுரையேற்க வேண்டும். பாஜகவை வீழ்த்துவதற்கு இளைஞர்களும், மாணவர்களும் ஒரு பெரிய போராட்டத்தை முன்னெ டுக்க வேண்டும். உங்களுக்கு (இளைஞர்கள்) மேற்கு வங்கம் வழிகாட்டும் என்றார் மம்தா பானர்ஜி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner