எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விநாயகர் சிலை கரைப்பு: மாணவன் பலி

சின்ன ஆராய்ச்சிக்குப்பத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி அரி கிருஷ்ணனின் மகன் 10ஆம் வகுப்பு மாணவன் யுவராஜ் (வயது 15), அவனுடைய நண்பன் பார்த்தசாரதி (14) மற்றும் சிலருடன் சேர்ந்து விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம் கடற்கரை பகுதிக்கு  எடுத்துச் சென்றனர்.

சிலைகளை கடலில் கரைத்த பின்னர் யுவராஜ் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அவர்கள் இரண்டு பேரையும் வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது. அதனை பார்த்த மற்றவர்கள் உதவி கேட்டு கூச்சல் போட்டனர். இந்த முயற்சியில் பார்த்தசாரதியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். ஆனால் மாணவன் யுவராஜ் கடல் அலை இழுத்துச் சென்றுவிட்டது.

இந்தநிலையில் கடல் அலையால் இழுத்துச் செல் லப்பட்ட யுவராஜ், கடலில் மூழ்கி பலியான நிலையில் அவனுடைய உடல் நேற்றுக் காலை வீராம்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. அதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் காவல்துறையினர் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி உடல் பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிலை கரைப்பு: குவிந்தது பட்டினப்பாக்கத்தில் 60 டன் குப்பை

பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை மாநகரம் முழுவதும் 2,672 பெரிய விநாயகர் சிலைகளை வைக்க மாநகர காவல்துறை அனுமதி வழங்கி இருந்தது. இந்தச் சிலைகளை ஆகஸ்ட் 27, 31, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் கரைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

முதல்நாள் சிலை கரைப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் நடந்தது. அங்கு 300-க்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் கொண்டு வரப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் இருந்து, வீடுகளில் வைத்து வழிபடப்பட்ட சிறிய விநாயகர் களிமண் சிலைகளும் கொண்டுவரப்பட்டு கடலோரம் குவிக்கப்பட்டன.

மலர் மாலைகள், அலங்காரப் பொருட்கள், துணிகள் ஆகியவற்றை கடலில் போட காவல்துறையினர் அனு மதிக்க வில்லை. அதனால், கடலோரப் பகுதியில் குப்பைகளாகக் குவிந்து கிடந்தன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், குப்பைகள் லாரியில் போட்டு, குப்பை பிரிக்கும் வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மொத்தம் 60 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

குடிசைகள் தீக்கிரை: வாகனங்கள் எரிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன் னிட்டு நல்லுர் காலனி பகுதியை சேர்ந்த ஒரு தரப் பினர் நேற்று இரவு விநாயகர் சிலையை வைத்து வழிபாட் டில் ஈடுபட்டுள் ளனர். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த வேறு தரப்பு 2 இளைஞர்கள் பைக்கில் வந்து விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டவர்களிடம் குடிபோதையில் ஏற் பட்ட தகராறில்கத்தி,தடி, இரும்பு குழாய் போன்ற ஆயுதங்களுடன் வந்து காலனி பகுதி வீடுகளில் புகுந்து பிரிஜ், வாசிங்மேஜின், டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தனர். எதிர்பட்ட பெண்கள் உள்ளிட் டவர்களை தாக்கினர்.

அந்த பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரை அடித்து மின் விநியோகத்தையும் நிறுத்தினர். இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கலவர பூமியாக மாறியது. அப்போது பெட்ரோலை ஊற்றி குடிசை வீடுகளுக்கு தீ வைத்தனர். அதில் 6 குடிசைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பல் ஆனாது. ஒரு ஆட்டோவும் தீ வைத்து எரிக்கப்பட்டன.  இது தொடர்பாக 32 பேர் மீது வழக்கு பதிவு செய்து  11 பேரை கைது செய்துள்ளனர். இதில் 5 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner