எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கேள்வி: ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன?
பதில்: இறைவா! நான் உன்னிடம் முழுமையாகச் சரணடைகிறேன். நான் உனது கருவி. என்னை வழி நடத்துவது உன் பொறுப்பு என்று மனப்பூர்வமாக பிரார்த்தித்து நமது கடமைகளை மிகச் சரியாக செய்வதுதான் ஆன்மீக வாழ்க்கை.
- 'விஜய பாரதம்' ஆர்.எஸ்.எஸ். வார இதழ்,
1.9.2017 பக்கம் 35

கடவுளிடம் சரணடைந்து விட்டால் நாட்டில் மின்சார வெட்டு என்பது அறவே ஒழிந்து விடும். காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். வயல்கள் எல்லாம் முப்போகம் சும்மா நிமிர்ந்து நிற்கும். வீட்டுக்கு வீடு திண்டுக்கல் தலைப்பாகட்டு பிரியாணி கிடைக்கும்.

(செம்மொழியானால் என்ன கிடைக்கும் என்பதற்கு இந்தப் பார்ப்பன ஏடுகள் இந்த மாதிரிதான் எழுதின)
ஆன்மீக வாழ்க்கை என்றால் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி போல் வாழ வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை? மறைந்த அனுராதா ரமணன் உயிரோடு இருந்திருந்தால் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றியிருப்பாரே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner