எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிறீகரிகோட்டா, ஆக. 30- ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி39 ராக்கெட் மூலம் அய்.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் செயற்கைக்கோள் வியா ழக்கிழமை மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை மாலை தொடங் கவுள்ளதாக இசுரோ அறிவித் துள்ளது.

இறுதிக் கட்ட பணியான 29 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை பகல் 1.59 மணிக்கு தொடங்கி வியாழக் கிழமை (31ஆம் தேதி) மாலை 6.59 மணிக்கு நிறைவடைந்த வுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படும். தற்போது ராக்கெட் டின் பாகங்கள் பொருத்தப் பட்டு, எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த செயற்கைக்கோள் மூலம் இயற்கை சீற்றம், பேரி டர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளைக் கண்கா ணிக்க முடியும். 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப் பப்படும் அய்.ஆர்.என்.எஸ். எஸ். 1-எச் செயற்கைகோள் இந் தியாவிலேயே வடிவமைக்கப் பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோமீட் டரிலும், அதிகபட்சம் 20,657 கிலோமீட்டரிலும், இந்த ராக் கெட் நிலை நிறுத்தப்படுகிறது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக அய்.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந் திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் (இசுரோ) முடிவு செய் தது. அதன்படி, ஏற்கெனவே 7 செயற்கைக்கோள்களை திட்ட மிட்டபடி வெற்றிகரமாக விண் ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதலில் செலுத்தப்பட்ட அய்.ஆர்.என்.எஸ்.எஸ் 1ஏ செயற் கைக்கோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதைத் தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட அய். ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைக்கோளை தற்போது இசுரோ ஏவவுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner