எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரோத்தக், ஆக. 30- குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக் கப்பட்ட சர்ச்சை சாமியார் குர் மீத் ராம் ரஹீமை ஹெலிகாப் டரில் காவல்துறையினர் கொண்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முத்தலாக் செல்லாது, தனிநபர் அந்தரங்கம் முக்கிய மானது என்று இரண்டு முக்கிய தீர்ப்புகளை உச்ச நீதிமன்றமும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என்ற தீர்ப்பை அரியானா நீதிமன்ற மும் கடந்த வாரம் அளித்தன. இது நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

ராம் ரஹீம் குற்றவாளி என்று கடந்த வெள்ளிக்கிழமை அரியாணா நீதிமன்றம் தீர்ப் பளித்த உடனே கலவரம் வெடித் தது. பஞ்சாபிலும், அரியாணா விலும் பல இடங்களில் கல வரம் நடந்தது. 38 பேர் கொல் லப்பட்டனர்.

கலவரத்தால் அரியாணா பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில் 2 பெண்களை பாலி யல் வன்முறை செய்த குற்ற வாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீமை காவல்துறையி னர் ரோத்தக் சிறைக்கு ஹெலி காப்டரில் கொண்டு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு குற்றவாளியை மக்களின் வரிப்பணத்தில் எப் படி சொகுசாக ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லலாம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் கண்ட னங்கள் எழுந்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner