எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அண்ணல் காந்தியாரின் நினைவாக, புதுடில்லி ராஜ் காட் அருகே, நிறுவப்பட்டுள்ள காந்தி தர்சன் எனும் அரங்கத்தில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் "மெத்தப் படித்தவர்கள்" கூட்டம் நடைபெற்றுள்ளது. அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட நூறு அறிவாளிகள்(?) கலந்து கொண்டார்களாம்.

அந்த அரங்கத்தில், ஆர்.எஸ்.எஸ். கொடியையும் ஏற்றி விட்டார்கள்.

இந்த அரங்கு, மத்திய கலாச்சாரத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது. பிரதமர் இதற்குத் தலைவர்.

இங்கே, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதையை வைக்கவில்லையா? அதே போல், இன்னும் சில காலத்தில் காந்தியார் நினைவிடத்தில், கோட்சே படத்தையும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்புத்தகமான கோல்வால்கர் எழுதிய சிந்தனைகளின் தொகுப்பையும் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner