எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கூடலூர், ஆக. 30- கூடலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு கோழிப்பாலம் பகுதியில் பாண்டியாறு ஆற்றில் மாலை 5 மணிக்கு கரைக்கப்பட்டது.
இந்த நிலையில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த கணே சன் என்பவரது மகன் ரமேஷ் (வயது 27) என்பவரை காண வில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து தேவாலா காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து தீவிர விசா ரணை நடத்தினர். அப்போது பாண்டியாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் விநாயகர் சிலைகளை கரைக் கும் போது குறிப்பிட்ட பகுதி யில் மட்டும் நின்று கரைக்கு மாறு காவல்துறையினர் தொண்டர்களை அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி மிகவும் ஆபத்தான இடத்துக்கு சென்று விநாயகர் சிலைகளை கரைத்ததுடன், அதில் உள்ள மரப்பலகைகளை நண்பர்களு டன் சேகரிப்பதற்காக ரமேஷ் சென்றது தெரிய வந்தது. அப் போது எதிர்பாராதவிதமாக ஆற்று வெள்ளத்தில் ரமேஷ் சிக்கினார்.
இதை தொடர்ந்து கூடலூர் தீயணைப்பு படையினர் பாண்டியாற்றில் இறங்கி ரமேசின் உடலை தேடினர். பின்னர் நேற்று காலை ரமேஷ் உடலை மீட்டனர்.
தொடர்ந்து பிரேத பரி சோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தேவாலா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner