எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோரக்பூர், ஆக.31  உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதத்தில் மட்டும் 296 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையே இந்த சம்பவத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் குழு ஒன்றை அமைத்தார்.

மருத்துவ கல்லூரி கூடுதல் தலைமை செயலாளர் அனிதா பட்நகர் ஜெயின் உட்பட பல மருத்துவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கையை அதன் முதல்வர் பி.கே.சிங் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை மொத்தம் 1,250 குழந்தைகள் இறந்துள்ளன. கடந்த ஜனவரியில் 152, பிப்ரவரியில் 122, மார்ச்சில் 159, ஏப்ரலில் 123, மே மாதத்தில் 139, ஜூனில் 137, ஜூலையில் 128 குழந்தைகள் இறந்தனர்.

இவர்களில் பெரும்பாலான குழந் தைகள் குறை பிரசவத்தில் பிறந்து அய்சி யுவில் இறந்துள்ளன. மற்ற குழந்தைகள் மூளை அலர்ஜி பிரிவில் இறந்துள்ளன. இந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 296 குழந்தைகள் இறந்துள்ளன. இதில் அய்சியு பிரிவில் 213 குழந்தைகளும், மூளை அலர்ஜி பிரிவில் 77 குழந்தைகளும் இறந்துள்ளன. குறைபிரசவத்தில் பிறந்த குழந் தைகள், காமாலை, நிமோனியா, மூளை வீக்கம் போன்ற நோய்களால் பாதிக்கப் பட்ட குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இந்த மருத்துவ மனையில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த குழந்தைகள் முன்கூட்டிய அனுமதிக்கப்பட்டிருந்தால் பல குழந் தைகளை காப்பாற்றியிருக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner